விருமாண்டி வசனகர்த்தா.. சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மரணம்..; கமல் புகழஞ்சலி
விருமாண்டி வசனகர்த்தா.. சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மரணம்..; கமல் புகழஞ்சலி
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு வயது மூப்பு காரணமாக கோவையில் இன்று (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 96.
இவர் 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூலுக்கான தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்..
அவரது இறுதிச் சடங்குகள் நாளை (ஜூலை 1) காலை 9 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் மயானத்தில் நடைபெறுகிறது.
அவரின் மறைவுக்கு நடிகரும் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் பதிவில்…
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா… நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார்.
அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
Sahitya Akademi Award winner writer Puviyarasu passed away

கவிஞர் புவியரசு சில குறிப்புகள்…
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனியில் சிவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் கவிஞர் புவியரசு.
புவியரசுக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜெகநாதன். ஆனால் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக புவியரசு என மாற்றிக் கொண்டார்.
இவரது மனைவி ஜெகதாம்பாள் மற்றும் மகன் இறந்துவிட்ட நிலையில், 2 மகள்கள் உள்ளனர்.
‘காற்று’ என்ற சிற்றிதழை நடத்திய இவர், நடிகர் கமல்ஹாசனின் ‘மையம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து 120 புத்தகங்களை எழுதி உள்ளார்..
ஆங்கிலம், ரஷ்யன், மலையாளம், இந்தி, இந்தி ஆகிய மொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.
மேலும் ‘மகாநதி’, ‘விருமாண்டி’, ‘ஹவுஸ்ஃபுல்’ முதலான படங்களில் வசனகர்த்தாகவும், நடிகராகவும் பங்கெடுத்தவர் இவர்..
கமல்ஹாசன் உருவாக்கிய ‘மருதநாயகம்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.. 30 வருடங்களுக்கு முன்பே இந்த படம் தொடங்கப்பட்டாலும் இந்த படம் நிறைவடையவில்லை.. இது கமல்ஹாசனின் லட்சிய படம் என்பது குறிப்பிடத்தக்கது..
—

