சூரி ஒரு சூப்பர் இன்ஸ்பிரேஷன்.. ஆர் ஜே பாலாஜி..; ‘மண்டாடி’ படத்தில் ரிஸ்க் இல்லை.. ரிஸ்க் தான் படமே.. – சூரி
சூரி ஒரு சூப்பர் இன்ஸ்பிரேஷன்.. ஆர் ஜே பாலாஜி..; ‘மண்டாடி’ படத்தில் ரிஸ்க் இல்லை.. ரிஸ்க் தான் படமே.. – சூரி
காமெடியனாக பல படங்களின் நடித்து வந்த சூரி தற்போது கதை நாயகனாக பல படங்களின் எடுத்து வருகிறார்… அவர் கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளன..
விடுதலை, கருடன், மாமன் உள்ளிட்ட ஹார்ட்ரிக் வெற்றியை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்துள்ளார் சூரி..
முழுக்க முழுக்க கடல் மற்றும் மீனவர்கள் சார்ந்த கதையை மிக பிரம்மாண்டமாக இயக்கி உள்ளார் மதிமாறன் புகழேந்தி.. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்..
வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி இந்த படம் இந்தியளவில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது..
இந்த நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது..
சூரியின் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர் மேலும் சூரியின் தாயார், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே பாலாஜி பேசும்போது..
“நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சூரி நண்பனாக வந்துள்ளேன்.. எங்களுக்குள் நல்ல பழக்கம் உண்டு.. சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.. அவர் இந்த இடத்திற்கு வர கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்டது..
1999 ஆம் ஆண்டு சங்கமம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக ஒரு காட்சியில் நடித்திருந்தார்.. பல பிரச்சினைகளைத் தாண்டி அவர் இந்த இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். அவர் எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்.. மண்டாடி படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று வாழ்த்தி பேசினார் ஆர்.ஜே பாலாஜி..
அதன் பின்னர் நடிகர் சூரி பேசும் போது..
எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது வெற்றிமாறனுக்கு நான் எப்போது நன்றி சொல்ல வேண்டும்.. அவர் இல்லை என்றால் இந்த இடத்தில் நான் இல்லை. இனி நடிக்கப் போகும் படங்களுக்கும் வெற்றியின் அவருக்கே சாரும்..
மண்டாடி படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் அனைத்து நாட்களிலும் வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.. அவர்கள் இல்லை என்றால் இந்த படம் இந்த அளவு பிரம்மாண்டமாக வந்திருக்காது..
மண்டாடி படத்தில் ரிஸ்க் இல்லை.. ரிஸ்க் தான் படமே உருவாகியுள்ளது..
சின்ன இயக்குனர் பெரிய இயக்குனர் என்றெல்லாம் இளையராஜா பார்க்க மாட்டார்.. எல்லா படங்களுக்கும் இசையை கொடுப்பார்.. அது போல தான் ஜிவி பிரகாஸ்.. எல்லா இயக்குனர்களுக்கும் சம அளவில் தன்னுடைய இசைப் பணியை சிறப்பாக கொடுத்து வருகிறார்.. அவருக்கு நன்றி..
விழாவில் நடிகர் சூரியின் தாயாரும் பங்கேற்று பேசினார்.
என்னுடைய மகன் ₹300 ரூபாய் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.. ஆனால் இன்று அவனுக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது..
ஒரு காலத்தில் சோறுக்கு வழியில்லாமல் தண்ணீர் குடித்து படுத்து இருப்பார்.. இன்று உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் அனைவருக்கும் நன்றி.. ” என்று நெகிழ்ச்சியாக பேசினார்..
RJ Balaji emotional speech about Soori struggles in Cinema

