கலக்கல் காமிக்ஸ்.. மூணு பாட்டும் செம ஹிட்டு.. ‘ரெட்ரோ’ க்கு காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்

கலக்கல் காமிக்ஸ்.. மூணு பாட்டும் செம ஹிட்டு.. ‘ரெட்ரோ’ க்கு காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்
நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ரெட்ரோ’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலானது.. கனிமா பாடலுக்கு சூர்யா மற்றும் பூஜா போடும் ஆட்டம் ரசிகர்களிடையே வைரலாகி பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்..
மேலும் நாயகனுக்கு மாஸ் காட்டும் பாடலாக தீ ஒன் பாடலும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறத.. இதில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என தகவல்கள் அண்மையில் வந்த வண்ணம் இருந்தன.. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை..
www.rightnewsraja.com
இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியானது. மேலும், வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் படக்குழு வெளியிட்டு வருகிறது.
தற்போது 10-வது எபிசோட் வெளியாகி உள்ளது.. படத்தில் உள்ள நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை குறிப்பிட்டு இந்த காமிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது..
Retro movie comics and songs goes viral