இனி நடிக்க மாட்டேன்.. பிரச்சனைக்கு இட்லி நடிகையே காரணம்.. எனக்கு பிளாக் மெயில் திருமணம் – ரவி மோகன்
இனி நடிக்க மாட்டேன்.. பிரச்சனைக்கு இட்லி நடிகையே காரணம்.. எனக்கு பிளாக் மெயில் திருமணம் – ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. சமீபத்தில் இவர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.. இவரது தந்தை எடிட்டர் மோகன் இவரது அண்ணன் மோகன் ராஜா..
இவர்களது குடும்பம் கலைக் குடும்பம் என்ற வகையில் பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார்.. கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு மேலாக நீடித்த இவர்களின் இல்லற வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது..
பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் தொடர்பில் இருப்பதால் ரவிக்கும் ஆர்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் பறந்தன.
சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கூட பின்னணி பாடகி கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ரவி மோகன்.
இந்த நிலையில் இன்று மே 16ஆம் தேதி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து தனது பிரச்சனைகள் அனைத்தையும் ஆவேசமாக எமோஷன் ஆக தெரிவித்தார் ரவி மோகன்..
அவர் பேச்சின் சில துளிகள் இதோ…
ஆர்த்தியை திருமணம் செய்ய வேண்டாம் என பெற்றோர்கள் சொன்னார்கள்.. ஆனால் திருமணம் செய்து கொண்டேன்.. அவர்கள் எங்களுக்கு அட்சததை தூவும் போது கூட நாசமாக போகட்டும் என்று தான் சொல்லி இருப்பார்கள்..
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை.. எனக்கு நடந்தது ஒரு பிளாக் மெயில் திருமணம் தான்..
16 வருடங்களாக பொறுமையாக தான் இருந்தேன்.. ஆனால் அதற்கும் மேல் பொறுமை இல்லை. பல வருடங்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பல ஹோட்டல்கள் தனியாக தான் தங்கி இருந்தேன்..
பொறுமைக்கு எல்லை உண்டு.. இப்போது எல்லாவற்றையும் சொல்கிறேன்.. வீட்டில் சுத்தமாக மரியாதை கிடையாது.. மரியாதை இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ முடியும்..

என் வாழ்க்கையில் பிரச்சனைக்கு மூன்று பெயர் கொண்ட இட்லி நடிகை தான் காரணம் (குஷ்பூ).. அவர் தன் வயது உடைய மூன்று சீனியர் நடிகர்களுடன் இணைந்து கொண்டு என் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார். ஃபெமினிசம் பேசுவார் பெண்ணியம் பேசுவார் ஆனால் அவருக்கு பெண்ணியம் தெரியுமா?
நான் பெண்ணியம் பேசுபவன் தான்.. அதனால்தான் என் வீட்டில் மரியாதையாக எல்லாரையும் நடத்தினேன்.. பேராண்மை என்ற படத்தில் கூட நான் பேசியிருப்பேன் அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன்.. என் பெற்றோர்கள் அப்படித்தான் என்னை வளர்த்தார்கள்..
என் குழந்தைகளை பார்க்க விடவில்லை.. அவர்கள் மேலும் பாசமாக இருக்கிறேன்… என் சின்ன பையனுடன் இரவில் செஸ் விளையாடுவேன்.. அவன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நான் தோற்பேன்..
அவன் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தேன்.. ஆனால் என்னை குழந்தைகளை பாடிகார்ட் வைத்து குழந்தைகளை பார்க்க விடவில்லை.. அவர்களுக்கு ₹ 50 லட்சம் பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளேன்.. அவர்கள் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக பாசமாக வளர்த்து வந்தேன்… ஆனால் அவர்களை பார்க்க கூட என்னை அனுமதிக்கவில்லை…
டிக் டிக் டிக் படத்தில் இணைந்து என் மகனுடன் நடித்த போதுதான் நான் சந்தோஷமாக இருந்தேன்.. அதன் பிறகு அவர்களை பார்க்க விடவில்லை..
என் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. எனவே இனி புது படங்களில் நடிக்க மாட்டேன்.. எனக்கு விவகாரத்து (டிவோர்ஸ்) கிடைக்கும் வரை நான் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன்..
இவ்வாறு தனது மனக்குமுறலை பத்திரிகையாளர்கள் முன்பு கொட்டி தீர்த்தார் நடிகர் ரவி மோகன்..
இதனை பார்க்கும் ரசிகர்கள் ரவிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் நடிகை குஷ்பூ வையும் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்..
Ravi Mohan angry press meet and slams Khushboo

