காமெடிக்கு தாவிய இயக்குநர் ராம்..; ‘பறந்து போ’-கும் பரவசத்தில் மிர்ச்சி சிவா

காமெடிக்கு தாவிய இயக்குநர் ராம்..; ‘பறந்து போ’-கும் பரவசத்தில் மிர்ச்சி சிவா

 

காமெடிக்கு தாவிய இயக்குநர் ராம்..; ‘பறந்து போ’-கும் பரவசத்தில் மிர்ச்சி சிவா

 

 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயக்குனர் ராமுடன் இணைந்துள்ளது. ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற் கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை.

ரோட்டர் டாம் திரைப்பட விழாவிற்கு ‘பறந்து போ’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…

‘பேரன்பு’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரையிடப்பட்டபோது, ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார்..

ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .

மேலும் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பற்றிப் பேசிய ராம்..

“சிவாவும் நானும் 2007 இல் எங்கள் திரை வாழ்க்கையைத் தொடங்கினோம் – அவருக்கு ‘சென்னை 28’ பட மூலமும், எனக்கு ‘கற்றது தமிழ்’ படம் மூலமும் திரை வாழ்க்கை துவங்கியது. அப்போது ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா, என்னைப் பேட்டி எடுத்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து வேலை செய்ய இருவருமே மிகவும் விரும்பினோம். இறுதியாக, அது 2024 இல் ‘பறந்து போ’ படம் மூலம் நடந்தது.

‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம், முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார்.

“இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது,” என்று ராம் கூறினார்.

இயக்குநர் ராமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா கூறுகையில்…

“ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான மற்றும் சிறந்த அனுபவம். நான் எப்பொழுதும் ராம் சார் தனித்துவ மிக்கவர் என்றே சொல்வேன். அவர் நம் தமிழ் திரையுலகின் சொத்து. இந்த அருமையான வாய்ப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பிரதீப் சார் ஆகியோருக்கு நன்றி..

இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டபோது, இந்தக் கூட்டணி எப்படி இருக்கும் என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். ராம் சார் என்னை அணுகியபோது, நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன்.

“இப்படத்தின் கதை அருமையாக உள்ளது. இது ஒரு சிறப்பான படைப்பாக உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிவா, இயக்குநர் ராம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்..

Ram  Siva and Anjali combo for Parandhu Po