விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு.. Thalaivar 173 – பேமிலி என்டர்டெயின்மெண்ட்… – ரஜினி

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு.. Thalaivar 173 – பேமிலி என்டர்டெயின்மெண்ட்… – ரஜினி

 

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு.. Thalaivar 173 – பேமிலி என்டர்டெயின்மெண்ட்… – ரஜினி

 

புத்தாண்டு & பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் திரண்டு வருவார்கள்.. அப்போது அவர்களை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் கூறி ஆசி கொடுப்பது நடிகர் ரஜினிகாந்தின் வழக்கம்..

பல ஆண்டுகளாக இதை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.. சில சமயம் அவரது பிறந்த நாளிலும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்..

இந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரசிகர்களை வழக்கம் போல அவரது வீட்டு வாசலில் சந்தித்தார்..

அப்போது அவர் பேசும்போது…

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள்.. அவர்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது..அவர்கள் சந்தோஷமாக இருந்தால் தான் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்.. எனவே விவசாயிகளை மதிக்க வேண்டும் என்றார்..

பின்பு தலைவர் 173 பட அப்டேட் குறித்து கேள்விக்கு…” ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும்.. சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.. அந்த படம் நிச்சயம் எல்லாரையும் கவரும் ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக இருக்கும்..” என ரஜினிகாந்த் தெரிவித்தார்..

 

Rajinikanth reveal updates of Thalaivar 173