Breaking – TVK ஆதவ் கருத்துக்கள் பொய்… காலம் பேசாது.. பதில் சொல்லும்..; ரஜினி அறிக்கை
Breaking – TVK ஆதவ் கருத்துக்கள் பொய்… காலம் பேசாது.. பதில் சொல்லும்..; ரஜினி அறிக்கை
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை பற்றி கருத்து தெரிவித்திருந்தார் அதில்..
எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரு பிரபலமானவர். அவர் அரசியலுக்கு வர இருந்த நிலையில் திமுக மிரட்டலால் அரசியலுக்கு வரவில்லை.. அவருக்கு இல்லாத மன தைரியம் எங்கள் தலைவர் விஜய்க்கு இருப்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கொரோனா காலத்தில் எவரும் பாதிக்கப்படக்கூடாது.. முக்கியமாக தன் ரசிகர்கள் தன் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த மேடைகளிலேயே ரஜினிகாந்த் எதிர்த்து பேசியவர்.. அவருக்கு இருந்த மன தைரியம் எவருக்கும் இல்லை என ரஜினி ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்..

மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதவ் கருத்துக்கு எதிர்ப்புகள் தெரிவித்தனர்.. ரஜினிக்கு ஆதரவாக பேசி வந்தனர்..
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தமிழக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
அதில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் உண்மைக்கு மாறானது.. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் செல்லும் என்றும் தனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் தன்னை வாழ வைத்த ரசிகபெருமக்களுக்கும் நன்றி என ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

கூடுதல் தகவல்..
மேலும் தன்னுடைய கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்… ஆதவ் பேச்சை விஜய் கண்டிக்க வேண்டும் எனவும் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்..
Rajini statement against TVK member Aadhav Arjuna

