Coolie – A : அஜித் போல நாகர்ஜுனா..; சத்யராஜுடன் முரண்பாடு.; லோகேஷ்.. நீ கமல் ரசிகரான்னு கேட்டேனா..? – ரஜினி

Coolie – A : அஜித் போல நாகர்ஜுனா..; சத்யராஜுடன் முரண்பாடு.; லோகேஷ்.. நீ கமல் ரசிகரான்னு கேட்டேனா..? – ரஜினி

Coolie – A : அஜித் போல நாகர்ஜுனா..; சத்யராஜுடன் முரண்பாடு.; லோகேஷ்.. நீ கமல் ரசிகரான்னு கேட்டேனா..? – ரஜினி

 

 

ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன் ஹிந்தி நடிகர் அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் ஷாகிர்,  சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சார்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்..

இந்தப் படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.. 35 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்திற்கு A சர்டிபிகேட் கிடைத்துள்ளது.. இதற்கு முன்பு 1980 ஆண்டுகளில் ரஜினி நடிப்பில் வந்த நெற்றிக்கண், நான் சிகப்பு மனிதன் மற்றும் சிவா ஆகிய படங்கள் ஏ சர்டிபிகேட் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது..

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.. நிச்சயம் இந்த படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு எப்போது போல கலகலப்பாக அமைந்தது.. அவர் பேசிய பேச்சு துளிகள் இதோ..

இந்தப் படத்தின் கதையை லோகேஷ் என்னிடம் சொல்லும் போது நான் ஒரு கமல் ரசிகர் என்று சொன்னார்.. அப்போது நான் நினைத்துக் கொண்டேன்.. யோவ் நீ கமல் ரசிகர் என்று நான் கேட்டேனா..?

அதாவது அவர் மறைமுகமாக சொல்கிறாரா? இது இன்டெலிஜென்ட் ஆன படம்.. பஞ்ச் டயலாக் பேசும் படம் அல்ல என்று கலாய்க்கிறாராம்..

எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியாக முரண்பாடு உள்ளது.. அவர் மனதில் பட்டதை பேசிவிட்டு போய்விடுவார்.. மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலாம்.. ஆனால் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு பேசுபவர்களை நம்ப முடியாது.

வெங்கட் பிரபு இயக்கிய அஜித் படத்தில் ஒரு வசனம் இருக்கும்.. நானும் எத்தனை நாளா நல்லவனாக நடிப்பது என்பது போல இந்த படத்தில் நாகர்ஜூனா கேரக்டர் அமைந்திருக்கு..

லோகேஷ் ஒரு இன்டெர்வியூ பார்த்தேன். உட்கார்ந்துகொண்டு பார்த்தேன் முடியல.. படுத்துக்கொண்டு பார்த்தேன் முடியல… தூங்கி எழுந்து பார்த்தேன் அப்பாவும் முடியல.. என சிரித்துக்கொண்டே பேசினார்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு 2 மணி நேரத்துக்கு லோகேஷ் இன்டெர்வியூ அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Rajini funny speech at Coolie Audio launch