இந்தியாவே எதிர்பார்த்த கமல் & ரஜினி இணைந்தனர்.. குஷ்பு வாழ்த்து..; ஆனால் ஒரு ட்விஸ்ட்.?!

இந்தியாவே எதிர்பார்த்த கமல் & ரஜினி இணைந்தனர்.. குஷ்பு வாழ்த்து..; ஆனால் ஒரு ட்விஸ்ட்.?!

 

 

இந்தியாவே எதிர்பார்த்த கமல் & ரஜினி இணைந்தனர்.. குஷ்பு வாழ்த்து..; ஆனால் ஒரு ட்விஸ்ட்.?!

 

1970 ஆண்டுகளில் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமான போனது கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்தார்.. ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார்.. அதன் பிறகு இரட்டை நாயர்களாக இவர்கள் நடித்து வந்தனர்.

கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் இவர்கள் இணைந்து நடித்தனர்.. அதன் பிறகு தனித்தனியாக நடிப்பது என முடிவு செய்து இருவரும் விலகி விட்டனர்..

இவர்கள் மீண்டும் இணைவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.. தற்போது 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைகிறார் ரஜினிகாந்த் என்று அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படம் ரஜினி நடிப்பில் உருவாகும் 173-வது படமாக அமைந்துள்ளது.. எனவே இந்த படத்திற்கு தலைவர் 173 என்ற தற்காலிக பெயரிட்டுள்ளனர்..

இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்க இதில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார்.. இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த (28 வருடங்களுக்கு முன்பு) ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கி வெற்றி கொடுத்தவர்..

ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பது சமீபத்தில் உறுதியானது.. ஆனால் அந்தப் படத்தை யார் இயக்குவார் என அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகவில்லை.. இந்த நிலையில் கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..

ஒருவேளை இந்த படத்தில் கமல் ஏதாவது கெஸ்ட் ரோலிங் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது..

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தனது கணவர் சுந்தர் சி மற்றும் ரஜினி கமல் ஆகியோரது படங்களை பகிர்ந்த நடிகை குஷ்பு எனது மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி” என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்..

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில்…

“காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173 படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Rajini and Sundar joins in Kamal production