ராஜா கிளி விமர்சனம் 3.5/5.. ராணிகள் ராஜ்ஜியம்

ராஜா கிளி விமர்சனம் 3.5/5.. ராணிகள் ராஜ்ஜியம்

 

 

ராஜா கிளி விமர்சனம்.. ராணிகள் ராஜ்ஜியம்

 

ஸ்டோரி…

முருகப்ப சென்றாயர் (தம்பி ராமையா).. டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி பெரிய தொழில் அதிபராக இருப்பவர்.. இவரது முதல் மனைவி தீபா..

சிலர் சொல்லும் ஆலோசனைப்படி துணி வியாபாரம் தொடங்குகிறார்.. அந்த தொழிலிலும் கொடிகட்டி பறக்க தன் கடையில் வேலை பார்க்கும் வள்ளி மலரை 2தாக திருமணம் செய்து கொள்கிறார்.

3வதாக கல்லூரி மாணவி விசாகா என்ற பெண்ணையும் அவளின் அம்மா அப்பா சம்மதத்தின் பேரில் ஆசை நாயகியாக வைத்துக் கொள்கிறார்.. அவர்களுக்கு வேண்டிய அனைத்து ஆடம்பரங்களையும் செய்து கொடுக்கிறார்..

ஒரு கட்டத்தில் விசாகாவுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆல்பர்ட் மீது காதல் வரவே திருமணம் செய்து கொள்கிறார்.. ஆனால் விசாகாவை ஆல்பர்ட் கொடுமைப்படுத்த ஒரு கட்டத்தில் கணவனை கொல்ல சொல்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? விசாகாவை திருமணம் செய்து கொண்டாரா? காதலனை இழந்த விசாகா என்ன செய்தார்? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் தம்பி ராமையா.. அவருக்கேற்ற படி கதையை அமைத்து மனிதர் ஜாலியாக துள்ளி விளையாடியிருக்கிறார்..

மனுஷன் ஜாலியா இருக்காரே என நாம் ஒரு கட்டத்தில் அவர் மேல் பொறாமைப்படும் நேரத்தில் இடைவேளைக்குப் பிறகு தன் முதிர்ச்சியான நடிப்பில் கண்கலங்க வைத்து விட்டார்.. பணக்காரத் திமிரில் பெண்களை வளைத்து போடும் அனைத்து ஆசாமிகளுக்கும் தம்பி ராமையா கேரக்டர் பாடம் கற்பிக்கிறது..

இதுபோன்ற பிளேபாய் கேரக்டர்களை அப்பா இயக்குனர்கள் தங்கள் மகன் நடிகர்களுக்கு வைத்திருக்கின்றனர்.. ஆனால் முதல் முறையாக தன் அப்பாவுக்கு பிளேபாய் கேரக்டரை கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா..

டான்ஸ் மாஸ்டர் கதாபாத்திரத்தில் பின்னணிப் பாடகர் கிரிஷ்.. ஸ்மார்ட் ஆக வந்தாலும் தம்பி ராமையாவை ஓவர் டேக் செய்ய வகையில் கத்தி கத்தி பேசி எரிச்சலை வர வைக்கிறார்..

முதல் மனைவி தீபா சந்தேகப் பேர்வழி கிளைமாக்ஸ் கட்சியில் அவரும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.. 2வது மனைவி வள்ளி மலர் கேரக்டர்.. கொட்டாச்சி மனைவியாக வரும் இவர் ஒரு கட்டத்தில் தம்பி ராமையாவுக்கு இரண்டாவது மனைவியாக வசப்பட்டு கண்களில் கிறங்கடிக்கிறார்..

விசாகா ஆக ஸ்வேதா நடித்துள்ளார். இளமை பொங்கும் கேரக்டர்.. இவரது அம்மாவாக ரேஷ்மா, உதவி கமிஷனராக அருள்தாஸ், ஆலோசனை சாமியாராக பழ கருப்பையா, ஆடுகளம் நரேன், பாதுகாவலர்களாக ஆன்ட்ரூஸ், மாலிக் ஆகியோரும் உண்டு..

தம்பி ராமையாவின் மகனாக நடித்தவரும் செம.. முதலில் சாந்தமாக இருந்த இவர் திடீரென அதிரடியாக மாறும் இவரது சுயரூபம் சபாஷ்..

வக்கீலாக வரும் சுரேஷ் காமாட்சி, சமுத்திரக்கனிக்கு உதவியாக வரும் கிங்காங் மற்றும் அம்பானி சங்கர் ஆகியோரும் கவனம் பெறுகின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

கேதார்நாத் & கோபிநாத் ஆகியோர் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவை கொடுத்து படத்தின் தரத்தை உயர்த்துள்ளனர்.

தம்பி ராமையாவே இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்கள் ஓகே.. ‘சின்ன முள் பெரிய முள்..’ பாட்டு இளமை வேட்டு.. துள்ளலான ஆட்டமும் போட்டு இருக்கிறார்..

இடைவேளை முன்பு வரை படத்தை கலகலப்பாக கொண்டு சென்ற இயக்குனர் உமாபதி இரண்டாம் பாதியில் தந்தையிடம் சிறந்த நடிப்பை வாங்கியிருக்கிறார்.. தம்பி ராமையா இருந்தாலும் இந்த கதை சொல்லும் கேரக்டருக்காக சமுத்திரக்கனி கேரக்டரை வைத்து கொஞ்சம் அட்வைஸும் செய்து இருக்கிறார்..

சரவணபவன் அண்ணாச்சி கதையை கொஞ்சம் ஆல்டர் செய்து தொழிலதிபர் முருகப்பாவுக்கு பிரம்மாண்ட பங்களா.. பிரம்மாண்ட ட்ரான்ஸ்போர்ட் என படத்தையும் பிரம்மாண்டமாக கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ஆக.. ராஜா கிளி.. ராணிகள் ராஜ்ஜியம்

Rajakili movie review