இசை கத்துக்குங்க அனிருத்.. ‘காதலிக்க நேரமில்லை’ விழாவில் கருத்து சொன்ன ரஹ்மான்
இசை கத்துக்குங்க அனிருத்.. ‘காதலிக்க நேரமில்லை’ விழாவில் கருத்து சொன்ன ரஹ்மான்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ‘காதலிக்க நேரமில்லை’ படம் திரைக்கு வருகிறது.
இதில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் உள்ளிட்ட பலர் நடிக்க தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி மனைவி கிருத்திகா இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..
சென்னையில் ‘காதலிக்க நேரமில்லை’ பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்..
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது…
“தற்போது அனிருத் நன்றாக சிறப்பான இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுக்கிறார்.. இப்போது 10000 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் நிலைத்து நிற்கிறார் என்றால் திறமை இல்லாமல் நிலைத்து நிற்க முடியாது..
ஆனாலும் தன்னடக்கத்துடன் “தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்” என்று சொல்லும் அவரின் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது..
அனிருத் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. க்ளாசிகல் இசை படித்து அதில் நீங்கள் நிறைய பாடல்கள் இசையமைக்க வேண்டும். அப்போது இன்றைய இளைய தலைமுறைக்கு கிளாசிக்கல் இசை உங்கள் மூலமாக போய் சேரும்” என வேண்டுகோள் விடுத்தார் ரஹ்மான்.
Rahman advice to Anirudh to learn Classical music


