ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி – பிரதமர் & தென் கொரிய அதிபருடன் பங்கேற்ற பிரியங்கா மோகன்
ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி – பிரதமர் & தென் கொரிய அதிபருடன் பங்கேற்ற பிரியங்கா மோகன்
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்.
இவரை கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த இந்த விருந்தில், இந்தியத் திரைத்துறை சார்பில் நடிகை பிரியங்கா மோகன் விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தென் கொரியாவில் படமாக்கப்பட்ட ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது..
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் 12 அன்று வெளியான இந்த படம், மூன்று வாரங்களுக்குள் 1.35 கோடிப் பார்வைகளைக் கடந்து உலக அளவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது.
54 நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம், இந்தியா மற்றும் தென் கொரியா இடையிலான கலை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக இந்த விருந்தில் முன்னிறுத்தப்பட்டது..
இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரபல கொரிய பாப் பாடகரான அவூரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..
இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா மோகன், “ராஷ்டிரபதி பவனில் ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுது. இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் ஆகியோரின் முன்னிலையில் கலந்து கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
Priyanka Mohan at Rastrapathi Bhavan and met President and Prime Minister
#PriyankaMohan marks a proud milestone 🇮🇳✨
Actress @priyankaamohan marks a proud moment attending an exclusive dinner at Rashtrapati Bhavan 🇮🇳❤️
Hosted by @rashtrapatibhvn in the presence of PM @narendramodi and South Korea’s President #LeeJaeMyung
Her film #MadeinKorea garners appreciation on a global stage.

