பிரித்விராஜ் – ‘மைனா’ நந்தினி & காளி வெங்கட் கூட்டணியில் ‘குட் டே’
பிரித்விராஜ் – ‘மைனா’ நந்தினி & காளி வெங்கட் கூட்டணியில் ‘குட் டே’
டிவி சீரியல்களில் மைனா கேரக்டரில் நடித்து மைனா என்ற கேரக்டர் பெயருடன் பிரபலமானவர் நடிகை நந்தினி.. மேலும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் நடுவராக பங்கேற்று வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்களிடையே பிரபலமானார்..
இவை மட்டும் இல்லாமல் இவரது சொந்த நிறுவன தயாரிப்பில் இவரது கணவர் யோகி இயக்கத்தில் பல வெப் சீரிஸ்களில் நடித்து youtube-லும் கலக்கி வருகிறார்..
இந்த நிலையில் மைனா நந்தினி கதை நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘குட் டே’.
’96’ படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் என்பவர் கதை நாயகனாக நடித்துள்ளார்..
நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் பிருத்விராஜ் தயாரிக்க என்.அரவிந்தன் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
மேலும் காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் நடித்துள்ளனர்.
மது போதையில் இருக்கும் நாயகன் ஓர் இரவில் சந்திக்கும் பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி GOOD DAY உருவாகியுள்ளது..
Prithiviraj and Maina Nandhini starring Good day

