பருத்தி விமர்சனம்… தாய் அன்பை தொலைத்த அப்பாவி மகனின் வலி
பருத்தி விமர்சனம்… தாய் அன்பை தொலைத்த அப்பாவி மகனின் வலி
ஸ்டோரி….
திலிப்ஸ் & வர்ஷிட்ட சுகன்யா.. இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள்.. திலீப் கீழ் ஜாதியை சேர்ந்தவர்.. தாய் தந்தை இல்லாத அவன் பாட்டி வளர்ப்பில் வளர்கிறார்.. ஊரார் இவனை பல வழிகளில் நிராகரிக்க படித்து சாதிக்க துடிக்கிறார்.. இவருக்கு உறுதுணையாக தோழி இருக்கிறார்..
ஆனால் தோழியின் பாட்டியோ இவர்களின் பழக்கத்தை வெறுக்கிறார்.. இருவரும் ஒன்றாக விளையாடக்கூடாது என கண்டிக்கிறார். இந்த சூழ்நிலையில் திலீப் பாட்டியும் மரணம் அடைகிறார்.
இதனால் அனாதையாக தவிக்கிறார் திலிப்ஸ்.. அதன் பிறகு நடந்தது என்ன.? தோழனுக்கு கை கொடுக்க தோழி வந்தாரா.?
இந்தக் கதையில் சோனியா அகர்வாலின் பங்கு என்ன.? அவருக்கும் சிறுவனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
சோனியா அகர்வால், குட்டிப் புலி சரவணன்,
குழந்தை நட்சத்திரம் திலிப்ஸ், வர்ஷிட்ட சுகன்யா..
திலிப்ஸ் & வர்ஷிட்ட சுகன்யா.. இந்த கதையை நகர்த்திச் செல்லும் இரு சக்கரங்களாக சுழன்று உள்ளனர்.. இவர்களின் நட்பை பார்த்தால் நமக்கே பள்ளி நாட்கள் நினைவுக்கு வரும்..
இடைவேளை வரை சோனியாவின் பங்கு என்ன என்பது நமக்கே குழப்பம்.. ஆனால் இடைவேளைக்குப் பிறகு தன்னுடைய நடிப்பில் முத்திரை பதிக்கிறார் சோனியா..
குட்டி புலி சரவணன் காமெடி ஆசிரியராகவே பயணிக்கிறார்.. சிறுமையின்

டெக்னீசியன்ஸ்…
இயக்கம் – A குரு
ஒளிப்பதிவு – ராஜேஷ்
இசையமைப்பாளர் – ரஞ்சித் வாசுதேவன்
எடிட்டர் – RK செல்வம்
பாடல்கள்- நலங்கிள்ளி
தாயாக வந்தா நீயே… சிறுவன் சிறுமியின் அழகான நட்பை சொல்லும் பாடலாக அமைந்திருப்பது சிறப்பு.. என் மகளே நீ எங்கே… பாடல் வரிகள் அழகு… மகளை இழந்த தந்தையின் வலியை சொல்லும்..
மக்கள் தொடர்பு – நிதீஷ் – புவன்
இயக்குனர் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி”
பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் K பாரதி அவர்களை வைத்து, வளையல் என்ற திரைப்படத்தை இயக்கிய குரு A அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்..
ஜாதிக்கு எதிரான படங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் காதல் இல்லாமல் ஒரு நட்புக்குள் நுழைத்து அதில் ஒரு அம்மா மகன் பாசத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
ஆனாலும் ஒரு பக்கம் காதல் ஜோடி ஜாதி பிரச்சினையும் சொல்லியிருக்கிறார்..
பாரதிராஜாவின் உதவி இயக்குனர் இன்னும் திரைக்கதையில் மெனக்கடல் எடுத்து தன்னுடைய குரு பெயரைக் காப்பாற்றி இருக்கலாம்..
Paruthi Review Paruththi movie review
—

