Parimala and Co : விஜய்க்கு மக்கள் எழுச்சி.. அப்பவே கணிச்சேன்.. ஆனா சொல்ல முடியல.. – மிஷ்கின்
Parimala and Co : விஜய்க்கு மக்கள் எழுச்சி.. அப்பவே கணிச்சேன்.. ஆனா சொல்ல முடியல.. – மிஷ்கின்
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரிமளா & கோ’ (Parimala and Co). செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது..

அப்போது மேடையில் பேசிய சாண்டி மாஸ்டர்..
“இந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின் ஆகியோருடன் நடித்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். பாண்டிராஜிடம் நான் மாட்டிக் கொண்டேனா என்று தெரியவில்லை அவர் தினமும் காலை 7 மணிக்கு முதல் காட்சி எடுக்கக் கூடியவர். ஒவ்வொரு நாளும் யார் படப்பிடிப்பு தளத்திற்கு முதலாவதாக வருகிறோம் என எங்களுக்குள் போட்டி இருக்கும்” என்றார்..

நடிகை ஊர்வசி பேசும்போது…
“இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறிய போது நான் இந்த படத்தில் ஜெயராம் நடிக்கிறாரா என கேட்டுக் கொண்டேன். ஏனெனில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடித்துள்ளோம்.
மலையாள படங்களை விட வேகமாக படம் எடுக்கக் கூடியவர் இயக்குநர் பாண்டிராஜ். படப்பிடிப்பு சிறிய வீட்டிற்குள் நடைபெற்றதால் எங்கள் அனைவருக்குமே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அனைவரும் பணியாற்றினோம்..

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது…
“ஜெயராம், ஊர்வசி இருவருடன் இணைந்து நடித்திருப்பது வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம். நான் இயக்கிய படத்தில் ஜெயராமை நடிக்க கேட்டேன்.. அவர் மறுத்துவிட்டார்.
ஒரு திறமைசாலிக்கு மிக முக்கிய குணாதிசியமாக முடியாது, சரிவராது என்று கூறுகின்ற சாதுர்யம் வேண்டும், அது ஜெயராமிடம் இருக்கிறது.
ஊர்வசி மேடம் வாழ்க்கையை போகிற போக்கில் அணுகக் கூடியவர். ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ஒரு படிக்கட்டு காட்சி இருக்கும், அதில் கமலஹாசனை விட ஒரு படி சிறப்பாக நடித்திருப்பார் அவர்..
அதனை நடிப்பிற்கு இலக்கணம் என நான் என்னுடைய உதவி இயக்குநர்களிடம் பலமுறை கூறியுள்ளேன்..” என்றார்..

அதன் பின்னர் செய்தியாளர் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்..
முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய மிஷ்கின்…
“தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி சிறப்பா இருக்கு… அவர் கன்னியாகுமரி சென்ற போதே மக்கள் எழுச்சி இருந்ததை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என கிண்டல் செஞ்சாங்க, அப்படி எல்லாம் இருக்காது என நான் அன்றைக்கே கூறினேன்.
அப்போதே இதை சொல்ல வேண்டியது தானே ஜெயித்த உடனே இப்படி கூறுகிறீர்கள் என்று? இப்போது இதைப் பார்ப்பவர்கள் சொல்வார்கள்.
இருந்த போதிலும், தேர்தல் சமயத்தில் ஒரு சார்பு நிலையை எடுக்க முடியாது. ஏனெனில் உதயநிதி குடும்பமும் எனக்கு தெரியும்… அதனால் சொல்லவில்லை..
இந்த சூழலில் தற்போதைய முதலமைச்சரிடம் நான் எந்த விதமான கோரிக்கையும் கேட்கப் போவதில்லை. அவரின் செயல்பாடுகளை ரசிப்பேன்.. நான் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன்” என கூறினார் மிஸ்கின்..
Parimala and Co Event Mysskin speech about Vijay Govt in TN

