TIME WORK OUT AACHU.. WATCH VANDHACHU டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் ‘மெமோர்ஸ்’
TIME WORK OUT AACHU.. WATCH VANDHACHU டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் ‘மெமோர்ஸ்’
டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் தனித்துவமிக்க ‘மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பு பழைய நினைவுகளில் திளைக்கச் செய்கிறது..
இன்றைய நவநாகரீக பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாணியுடன், உணர்ச்சி மிகுந்த மனோபாவத்துடனான மிக நேர்த்தியான கலவையை ’மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பு அளிக்கிறது.
சென்னை, 30 செப்டம்பர் 2024: டைட்டன் ராகா, தற்காலப் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான கைக்கடிகாரங்களுக்காக புகழ்பெற்ற பிராண்டாக திகழ்கிறது.
மிக வேகமாக நெருங்கிவரும் இந்தாண்டின் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், தனது புதிய கைக்கடிகாரத் தொகுப்பான ‘மெமோர்ஸ்’ [Memoirs’.]-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. நினைக்கத் தூண்டும் பால்ய காலத்தின் மாயாஜாலத்தால் ஈர்க்கப்பட்ட நினைவுகள், குழந்தைப் பருவத்தின் சாராம்சத்தில் மூழ்கிப்போன உயிர்புள்ள தருணங்களை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட கைக்கடிகாரத் தொகுப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது டைட்டனின் ராகா. ஐந்து வித்தியாசமான அம்சங்களிலான வடிவமைப்புடன் ஒவ்வொரு கைக்கடிகாரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ரசனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவங்கள், மிக நுணுக்கமான கைக்கடிகார வேலைப்பாடுகள், கண்களைக் கவரும் மென்மையான வண்ணத்தேர்வுகள் என இன்றைய நவீன ஃபேஷனை வெளிப்படுத்தும் வகையிலும், பால்ய காலத்தின் நினைவுகளுக்குள் மூழ்கித் திளைக்கும் வகையிலும் மெமோர்ஸ் கைக்கடிகாரத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
டைட்டன் வாட்ச்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் அபர்ணா ரவி [Aparna Ravi, Marketing Head at Titan Watches] பேசுகையில்…
“நாம் பண்டிகைக் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால், எங்களது தனித்துவமிக்க கைக்கடிகாரத் தொகுப்பை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ராகாவின் புதிய அறிமுகமான ‘மெமோர்ஸ்’, ஃபேஷனின் ரசனையை வெளிப்படுத்துகையில் உணர்வுப்பூர்வமான பிரதிபலிப்புகளையும் அழகுற ஒருங்கிணைக்கிறது.
‘மெமோர்ஸ்’ என்பது நம் கையில் அணியும் வெறும் கடிகாரமாக மட்டுமில்லாமல், நீங்கள் எங்கு சென்றாலும் அங்கே உங்களது மறக்க முடியாத நினைவுகளின் அழகியல் வெளிப்பாடாகவும் அழைத்து செல்கிறீர்கள். எங்களது ‘மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பானது, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவும், இன்றைய ஃபேஷனின் வெளிப்பாடாகவும் இருப்பதோடு பெண் வாடிக்கையாளர்களிடையே புதிய பாணியை உருவாக்கும் ப்ராண்டாக ’ராகா’ என்ற தனித்துவமிக்க இடத்தை வலியுறுத்துகிறது.’’ என்றார்.
இந்த கைக்கடிகாரத் தொகுப்பின் பிரத்தியேகமான ஒன்றாக, புதுமையின் அம்சமாக இருப்பது கேப்சூல் வடிவிலான டயல் [capsule-shaped dial], அதன் இருபுறங்களிலும் ஜொலிக்கும் கற்கள் கொண்ட கடிகாரம்.
இது பால்ய கால நினைவுகளையும், கொண்டாட்டம், செறிவுமிக்க தருணங்களையும் நினைவுக்கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘கிரிஸ்டல் கேப்சூல்’ [Crystal Capsule’] என்று பொருத்தமாக அழைக்கப்படும், நேர்த்தியான இந்த கைக்கடிகாரம் மெஷ் ஸ்ட்ராப், கற்கள் பொருத்தப்பட்ட வளையங்களின் பின்னலமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பது ஃபேஷன் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
‘பின்வீல் ட்ரீம்ஸ்’ [Pinwheel Dreams’] என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் கைக்கடிகாரம், உங்களது குழந்தைப்பருவ காலத்திற்கே அழைத்து சென்று, மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைக்க செய்யும். இதில் மிக முக்கியமான விஷயம், காற்றின் அசைவுக்கேற்ப, பின்வீல் நகரும் அழகை நேரம் கழிவது கூட தெரியாமல் ரசிக்க வைக்க தூண்டும்.
சிறுவயது நினைவுகளைத் தூண்டும் இந்த பின்வீல், மெல்லிய மற்றும் ஜொலிக்கும் வண்ண வரணங்களுக்கு இடையே நகர்ந்து மத்திய பகுதியில் உங்கள் மணிக்கட்டின் அசைவுக்கேற்ற வகையில் சுற்றுவது கால சக்கரம் அழகியலுடன் சுற்றுவதை உணர்த்து போல் இருக்கும். ஒவ்வொரு மணித்துளியையும் காட்டும் ஒரு அழகிய அடையாளமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சிறுவயதில் உங்கள் உடன்பிறந்த சகோதரி அல்லது சகோதரனுக்குத் தெரியாமல், அவர்கள் பார்வையில் பட்டுவிடாமல், நீங்கள் ரகசியமாக சாக்லேட் உறையைப் பிரிக்க முயற்சித்த அந்த அருமையான தருணங்களை மீண்டும் எண்ணிப் பார்க்க வைக்கிறது ‘டாஃபி ட்விஸ்ட்’ [Toffee Twist’]. இந்த கைக்கடிக்காரமானது, சாக்லேட் மீது மிக நுணுக்கமாக சுற்றி வைத்து, இரு புறங்களில் திருகியபடி வைத்திருந்த உறையைப் பிரதிபலிப்பது போல், மிக நேர்த்தியாக திருக்கி வைக்கப்பட்ட மணிகட்டு பட்டையுடனும், சாக்லேட்டை போன்ற டயல் உடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது, பால்ய காலத்தின் அந்த இனிப்பான தருணங்களை நினைவுறுத்தும்.
இந்த கைக்கடிகாரமானது, உங்கள் கையை சிறு வயது நினைவுகளுடன் சுற்றி அரவணைத்தப்படியே காலம் கடந்து நிலைக்கும் ஃபேஷனின் ஒரு அங்கமாக இருக்கிறது.
’கேன்டி ஸ்விர்ல்ஸ்’ [‘Candy Swirls’] கைக்கடிகாரம், உங்களுக்கு மிகவும் பிடித்த மிட்டாயை நீங்கள் முதல் முறையாக ஆசையோடு கடித்து சுவைத்த அந்த முதல் கடியின் நினைவுகளால் உங்கள் உலகத்தை பிரகாசமாக்குகிறது. அதன் மதர் ஆஃப் பேர்ல் டயலில் மயக்கும் சுழல்கள், அதிலிருந்து மாறுப்படுத்தி காட்டும் மெஷ் ஸ்ட்ராப்கள் வித்தியாசமான மெஷ் பட்டைகள் சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம் கோன்கள் மற்றும் பாப்சிகல்ஸ் போன்றவற்றின் வசீகரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதை பார்க்கும் ஒவ்வொரு தருணமும், உங்களுக்குள் இருக்கும் குழந்தை உணர்வை உற்சாகத்துடன் உணரவைக்கும்.
‘லேடிபக் விஸ்பர்ஸ்’ [Ladybug Whispers’] கைக்கடிகாரத்தின் மதர் ஆஃப் பேர்ல் டயல், வண்ண செறிவின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அழகை மெருகேற்ற, தனித்துவமான ஒன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும் உலோகத்திலான கைப்பட்டை எல்லாமும் சேர்ந்து உங்கள் குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தையும், புது கண்டுபிடிப்பின் அற்புதங்களையும் எதிரொலிக்கிறது.
லேடிபக் பதக்கமானது [ladybug pendant] உங்களுக்கு வசீகரத்தை அளிப்பதோடு, வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை, விளையாட்டுத்தனமாகவும் உற்சாக துள்ளலுடனும் கொண்டாட வைக்கிறது.
புதிய அறிமுகமான ‘மெமோர்ஸ்’ கைக்கடிகார தொகுப்பின் மூலம், ராகா பழைய நினைவுகள், பால்ய கால நாட்களின் தருணங்களின் சாராம்சத்தை ஒரு கதையைப் போல் அழகுடன் விவரணப்படுத்தி, ஒரு கைக்கடிகாரத்தை ஃபேஷனின் வெளிப்பாடாக மெருகேற்றி இருக்கிறது. கழுத்தில் அணியும் பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் செராமிக்கினால் செய்யப்பட்ட ப்ரேஸ்லெட்களின் தொகுப்பானது,
இதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதோடு, உங்கள் தனிப்பட்ட அடையாளச் சின்னமாகவும் கவனத்தை ஈர்க்கின்றன.

டைட்டன் வாட்ச்சஸ்சின் வடிவமைப்பு பிரிவின் தலைவர் திரு.மகேந்திர சௌஹான் [Mahendra Chauhan, Head of Design at Titan Watches] புதிய மெமோர்ஸ் கைக்கடிகார தொகுப்பின் அறிமுகம் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டபோது…
“சமீப காலமாக, நம்முடைய பால்ய கால நினைவுகள், மறக்க முடியாத தருணங்கள் என்பது ஃபேஷன் உலகில் ஒரு முக்கியத்துவம் பெற்ற கருப்பொருளாக இருந்து வருகின்றன. பழங்கால அழகியல் மற்றும் பல ஆண்டுகளுக்கு முந்தைய பாணியைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டைட்டனின் ராகா அறிமுகப்படுத்தியிருக்கும் ‘மெமோர்ஸ்’ கைக்கடிகார தொகுப்பு இந்த சமீபத்திய பாணியை மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கிறது. கைக்கடிகாரங்கள் என்பது வெறும் பயன்பாட்டு அணிகலனாக மட்டும் இல்லாமல் ஒருவரின் ஃபேஷன் குணாதியசத்தை அடிக்கோடிட்டு காட்டும் ஒன்றாகவும், சமகால பாணியையும் நினைத்துப் பார்க்க தூண்டும் பழைய நினைவுகளையும் இணைக்கும் ஒரு அற்புதமான படைப்பாகவும் திகழ்கிறது. பின்வீல் முதல் இந்த கைக்கடிகாரங்களில் இருக்கும் ஒவ்வொரு விவரணமும் காலம் கடந்தும் கவனத்தை ஈர்க்கும் கைக்கடிகாரங்களை உருவாக்கவேண்டுமென்ற எங்களது அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைந்திருக்கின்றன.
மேலும் மெமோர்ஸ் தொகுப்பின் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும், நவநாகரீக ஃபேஷனுடன் நினைக்கத் தூண்டும் நினைவுகளையும் உங்களுடன் அழைத்து செல்ல இந்த தொகுப்பு உதவுகிறது’’ என்றார்.
6,395 ரூபாய் முதல் 23,995 ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ‘மெமோர்ஸ்’ [Memoirs] கைக்கடிகார தொகுப்பு 13 வகையிலான கடிகாரங்களை நேர்த்தியுடனான கைப்பட்டை, டயல் உள்ளிட்டவையுடன் அழகிய அணிகலன்களாக வழங்குகிறது. இந்த தொகுப்பை டைட்டனின் இணைய தளமான titan.co.in அல்லது அருகிலுள்ள டைட்டன் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
டைட்டன் கம்பெனி லிமிடெட் பற்றி:
டைட்டன் கம்பெனி லிமிடெட் [Titan Company Limited (“Titan”)], டாடா குழுமம் [Tata Group] மற்றும் தமிழ்நாடு தொழில்துறை முன்னேற்ற வாரியம் [Tamil Nadu Industrial Development Corporation (TIDCO)] ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 1987-ல் டைட்டன் வாட்ச்சஸ் லிமிடெட் [Titan Watches Limited] என்ற பெயரில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 1994ம் ஆண்டில், டைட்டன் ஜூவல்லரி (தனிஷ்க்) பிரிவிலும் தடம் பதிக்கும் வகையில் பன்முகப்படுத்தப்பட்டது.
பின்னர் ஐகேர் நிறுவனமாகவும் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தியது. கடந்த முப்பது ஆண்டுகளாக, டைட்டன் வாய்ப்புகள் மக்களுக்கு சென்றையடையாத சந்தைகளில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வருகிறது. மேலும், வாசனை திரவியங்கள் (SKINN), பயன்பாட்டு அணிகலன்கள் மற்றும் இந்திய ஆடைகள் (Taneira) மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட பெண்கள் பைகள் (IRTH) உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை தயாரிப்பு பிரிவுகளில் வலுவான பிராண்டுகளை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் கைக்கடிகாரம் மற்றும் நகைத் தொழிலை மாற்றியமைப்பதற்காகவும், அனுபவமிக்க சில்லறை வர்த்தகத்தில் முன்னோடியாக இருப்பதன் மூலம் இந்தியாவின் சில்லறை சந்தையை வடிவமைப்பதற்காகவும் டைட்டன் மிகவும் பிரபலமான பிராண்டாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
Nostalgia Reimagined with Titan Ragas Memoir Collection

—–

