கிராமத்தில் செட்டிலாகும் விஜய் ஆண்டனி.;+ சசி இயக்கிய ‘நூறு சாமி’ ட்ரைலர் ரிலீஸ்
கிராமத்தில் செட்டிலாகும் விஜய் ஆண்டனி.;+ சசி இயக்கிய ‘நூறு சாமி’ ட்ரைலர் ரிலீஸ்
ஒரு படத்தின் வெற்றிக்கு கதை தான் முக்கியம்.. நெகட்டிவ் தலைப்புகள் இல்லை என அதிரடியாக அறிவித்து அதன் படியே பல படங்கள் தலைப்புகளில் நடித்து வெற்றி கண்டவர் விஜய் ஆண்டனி..
இவரது நடிப்பில் உருவான திரைப்படம் பிச்சைக்காரன்.. இந்த படத்தை சசி இயக்கி இருந்தார்.. இந்த படம் தென்னிந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கியது.
இந்த படத்தில் இடம்பெற்ற 100 சாமிகள் இருந்தாலும் என்ற பாடல் பிரபலமானது..
இந்த பாடலை இப்போது சசி மற்றும் விஜய் ஆண்டனி இணையும் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.. இப்படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், ஸ்வாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நூறு சாமி’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில், ‘நூறு சாமி’ படத்தின் ட்ரைலரை இன்று ஜூன் 8-ம் தேதி மாலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்..
இப்படம் வரும் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளது…
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் ஆண்டனி தான் விரைவில் பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தில் மூன்று வருடங்களில் செட்டிலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்..
கிராமத்தோடு வாழும் வாழ்க்கை தான் முக்கியமானது எல்லோரும் சென்னை உள்ளிட்ட சிட்டிக்கு வருகின்றனர்.. இங்கு பெரிய பெரிய மால்கள் மட்டுமே உள்ளது.. வேறு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்..
மேலும் கடந்த சில வருடங்களாகவே விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிந்து நடப்பதில்லை.. இயற்கையோடு பிரபஞ்சத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதால் காலில் செருப்பு அணிவதில்லை எனவும் விஜய் ஆண்டனி தெரிவித்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது..
Nooru Sami trailer update and Vijay Antony wish to settle in Village

