40 நாட்கள் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி.. DNA விமர்சனம் உறக்கம் தந்தது.. – நிமிஷா
40 நாட்கள் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி.. DNA விமர்சனம் உறக்கம் தந்தது.. – நிமிஷா
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’.
ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்..
அப்போது நாயகி நிமிஷா சஜயன் பேசும்போது…
“ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ஹிட் ஆகுமா, ஆகாதா? என்ற பதற்றம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் பதற்றம் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். இயக்குநர் நெல்சன் ஃபோன் செய்து படம் வெற்றி என சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்..
இதில் என் நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால், அது இயக்குநரைத் தான் சேரும். அவர் சொல்லிக் கொடுத்ததைத் தான் செய்தேன். நான் எப்போதும் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஒத்துழைப்பை மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா கதாபாத்திரம் இல்லை.
இதில், பிறந்து 40 நாட்களான குழந்தையை, நடிப்பதற்காக வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி” என்றார்..
Nimisha Sajayan emotional speech at DNA success meet
—-

