அண்ணி பாராட்டு.. ‘மெய்யழகன்’ பெயர் ட்ரு காலரில் வரலையா?.. மீம்ஸ் போட்டவர்களுக்கு கார்த்தி பதிலடி
அண்ணி பாராட்டு.. ‘மெய்யழகன்’ பெயர் ட்ரு காலரில் வரலையா?.. மீம்ஸ் போட்டவர்களுக்கு கார்த்தி பதிலடி
96 படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் பிரேம்குமார். இதனை அடுத்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘மெய்யழகன்’.
சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் இளவரசு, ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசினராக சுபா பணிபுரிந்து இருந்தார்.
இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.. படத்தை பார்த்தவர்கள் இந்த படம் உணர்வுபூர்வமான படம் என பாராட்டு தெரிவித்து வந்தார்.
இந்தப் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 5ம் தேதி மெய்யழகன் படத்தின் வெற்றி விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பத்திரிகையாளர்களுக்கு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினர்.

அப்போது
படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் பேசும்போது… 2டி நிறுவனத்தின் மூலம் தரமான படங்களை மட்டுமே தயாரிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறோம்.. இந்த படத்தை பார்த்த பொதுமக்கள் படத்தை கொடுத்த எங்கள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர் இதுவே இந்த படத்தின் வெற்றியாக நினைக்கிறோம்..
இயக்குனர் பிரேம்குமார் பேசும்போது…
இந்த மெய்யழகனை மெய்யழகனாகவே வர உதவி புரிந்த சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்தார்.
அடுத்து அரவிந்த்சாமி பேசும்போது.. என்னால் இந்த அன்பு பாராட்டு மழையை எப்படி ஏற்றுக் கொள்வது? எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. ஆனாலும் உங்கள் அன்புக்கு நன்றி.. படத்தில் ரிலீஸ் சமயத்தில் நான் வெளிநாடு சென்று விட்டேன் அதனால் எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளவில்லை.. ஆனால் இந்த நன்றி விழாவுக்கு வந்திருக்கிறேன்.. இது நன்றி தெரிவிக்கு விழா என்பதால் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்..

அடுத்து கார்த்தி பேசும்போது…
96 படத்தை பார்த்தபோது இந்த இயக்குனருடன் பணி புரிய வேண்டும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.. அப்படி ஒரு உணர்வு பூர்வமான படத்தை கொடுத்திருந்தார். அதுபோல மெய்யழகன் படத்தில் நடித்த போது முழு திருப்தி ஏற்பட்டது..
இந்த படத்தின் தயாரிப்பாளர் என் அண்ணி (ஜோதிகா) இந்த படத்தை பார்க்கவில்லை.. தயாரிப்பாளர் இன்னும் பார்க்கவில்லை? என அவரை கேட்டேன்.. அதன் பிறகு பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினார். கமர்சியல் படங்களை மீறி இது போன்ற தரமான படங்களில் நடிக்க வேண்டும்” தெரிவித்தார் என் அண்ணி ஜோதிகா.
படத்தின் முக்கியமான காட்சி மெய்யழகன் பெயரை அத்தான் அரவிந்தசாமி கண்டுபிடிக்க வேண்டும்.. அதற்கு பலரும் பல விதமான மீம்ஸ் போட்டனர்..
ட்ரு காலர் மொபைல் ஆப்பிள் மெய்யழகனை கண்டுபிடித்திருக்கலாம்.. அல்லது யாரிடமாவது கேட்டிருக்கலாம் அதற்கு அது பதில் இல்ல.
தனக்கு நெருக்கமான ஒருவரின் பெயரை மறந்து விட்டோம் அதை ஒரு குற்ற உணர்வாக நினைக்கிறார் அரவிந்தசாமி.
அந்த கேரக்டர் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும்.. அவனிடம் பேசி அவன் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலே தன் ஒரு பகல் பொழுதை கழிக்கிறார்.. அதுதான் இந்தப் படத்தில் வெற்றி என பாராட்டி பேசினார்.
பெரும்பாலும் நானும் அரவிந்த் சாமியும் இணைந்து பல காட்சிகள் நடித்திருந்தோம். ஆனால் அந்த போன் காட்சியில் நாங்கள் இணைந்து நடிக்கவில்லை.. அதன் பிறகு திரையில் அரவிந்தசாமியின் முக பாவனைகளை பார்த்தபோது மெய் சிலிர்த்து விட்டேன்.. அப்படி ஒரு அருமையான நடிப்பை கொடுத்து இருந்தார். ” என்று பேசினார் கார்த்தி..
இந்த படத்தை வெளியிட்ட சக்திவேலன் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலன் பட குழுவினருக்கு காளையை அடக்கும் வீரனை போன்ற உருவ பொம்மையயை அனைவருக்கும் கொடுத்தார்.
Meiyazhagan Karthi reply to Troll and movie haters

