மருதம் விமர்சனம் 4.25/5… வங்கியின் வஞ்சக வலையில் சிக்கிய கண்ணியமிக்க கன்னியப்பன்

மருதம் விமர்சனம் 4.25/5… வங்கியின் வஞ்சக வலையில் சிக்கிய கண்ணியமிக்க கன்னியப்பன்
ஸ்டோரி…
மனைவி ரக்ஷனா.. ஒரு மகன் ஆகியோருடன் விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் விதார்த்.. ஒரு நாள் இவரது நிலத்தை ஒருவர் வாங்கி விட்டதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.. உன் விவசாய நிலத்தை எனக்கு விற்றது ஒரு வங்கி தான் என சொல்கிறார் அந்த நபர்..
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று பிரச்சனை செய்கிறார்.. ஆனால் அங்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது.. அதாவது விதார்தின் தந்தை தான் இந்த நிலத்தை அடமானம் வைத்து நெல் அறுக்கும் மிஷின் வாங்கியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.. சில மாதங்கள் வட்டியும் கட்டி இருக்கிறார் ஆனால் அதன் அதன் பிறகு வட்டி கட்டாத காரணத்தினால் நிலத்தை வங்கி விற்று விட்டதாக தெரிவிக்கின்றனர்..
ஆனால் இந்த ஆவணங்கள் எல்லாம் பொய்.. வங்கி அதிகாரி சொல்வதெல்லாம் பொய் என்று தனக்குத் தெரிந்த போதிலும் அதை நிரூபிக்க முடியாமல் ஆதாரமில்லாமல் தவிக்கிறார் நாயகன்..
அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகனுக்கு யாரேனும் உதவினார்களா.? வங்கி அதிகாரி அப்படி சொல்ல என்ன காரணம்.? என்பதெல்லாம் வலி மிகுந்த கதை..
கேரக்டர்ஸ்…
விதார்த் – கன்னியப்பன்
ரக்ஷனா – சிந்தாமல்லி
அருள்தாஸ் – கதிர்வேல்
மாறன் – பழனி
தினந்தோறும் நாகராஜ் – கந்தன்
சரவண சுப்பையா – ராஜசேகர்
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் விதாரத்துக்கு வாழ்த்துக்கள்.. மைனா தொடங்கி.. குரங்கு பொம்மை – அஞ்சாமை – இறுகப்பற்று – வரிசையில் இந்த ‘மருதம்’ படம் விதார்த் நடிப்புக்கு மகுடம் சூட்டும்..
எந்த ஹீரோயமும் இல்லாமல் தன் நிலத்தை மீட்டெடுக்க விவசாய வேதனைகளை தன் உடல் மொழியில் வலியால் உணர்த்தி இருக்கிறார் விதார்த்..
நாயகன் துவண்டு விழும்போதெல்லாம் தோள் கொடுக்கும் இல்லத்தரசியாக ரக்ஷனா அசத்தல்.. தமிழ் சினிமாவுக்கு அழகான திறமையான நடிகை கிடைத்திருக்கிறார்.. இவர் பேசும் அந்த கிராமத்து பாஷையும் அழகு சேர்க்கிறது..
சீரியஸான இந்த படத்திற்கு தன் டைமிங் காமெடி மூலம் சிரிப்பு/ சிறப்பு சேர்த்திருக்கிறார் மாறன்..
வித்தியாசமான வக்கில் கந்தனாக தினந்தோறும் இயக்குனர் நாகராஜ் நடித்திருக்கிறார்.. இவரது கேரக்டர் ஒரு நிஜ நபரின் கேரக்டர் என இயக்குனர் சொன்னது குறிப்பிடத்தக்கது..
வங்கி அதிகாரியாக மிரட்டலான தோற்றத்தில் சரவண சுப்பையா மற்றும் வியாபாரி அருள்தாஸ் ஆகியோரும் உண்டு..
டெக்னீசியன்ஸ்…
ஒலி :T உதயகுமார்
DI : வசந்த்
கலை : தாமு MFA
பி ஆர் ஓ: A. ராஜா
தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பு : சி. வெங்கடேசன்
எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
எடிட்டிங் : B சந்துரு
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம்.. படம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருப்பது சிறப்பு..
இரைச்சல் மிகுந்த இசைக்காலத்தில் இதமான இசையை கொடுப்பதில் தன்னை அடிக்கடி நிரூபித்துக் கொள்கிறார் இசையமைப்பாளர் ரகுநந்தன்.. பாடல்களும் வரிகளும் ரசிக்கும் ரகமே..
பொழுதுபோக்கு நிறைந்த தமிழ் சினிமாவில் இதுபோல வங்கி அதிகாரியின் வஞ்சகம் & விவசாயின் வலியை சொல்ல இயக்குனர்கள் இல்லை.. ஆனால் அந்த காலி இடத்தை இயக்குனர் கஜேந்திரன் நிரப்பிருக்கிறார்..
ஒரு வங்கி அதிகாரி தான் நினைத்தால் எப்படி எல்லாம் விவசாய கடன்களை வளைத்து தன் பாக்கெட்டை நிரப்பிக் கொள்வார் என்பதை ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கஜேந்திரன்..
ஒரு விவசாயிக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தால் அவர் எப்படி இதை கையாளலாம் என்பதை அழகாக காட்சிப்படுத்தி தகவல் அறியும் சட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்..
மேலும் தனியார் கல்வி & அரசு கல்வி ஆகியவற்றையும் ஒப்பிட்டு சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்..
Marutham movie review