மரியா விமர்சனம் 3.25/5… கன்னியாஸ்திரியின் தீரா கன்னி ஆசை

மரியா விமர்சனம் 3.25/5… கன்னியாஸ்திரியின் தீரா கன்னி ஆசை
கன்னியாஸ்திரியாக மாற மறுக்கும் ஒரு ஒரு பெண்ணின் தீராத காதல் காம கதைகயை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. இது கிறிஸ்துவ மதத்தில் ஒரு சர்ச்சையை விரைவில் உண்டாக்கும்.
பொதுவாக இந்து மதத்தை எதிர்த்து பல திரைப்படங்கள் வந்துள்ளது.. கடவுளை மறுத்து நாத்திகம் பேசும் பல படங்களை பார்த்து இருக்கிறோம்.. இதில் முதல்முறையாக கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து அதிலும் கன்னியாஸ்திரி ஆக இருக்கும் ஒரு பெண் மத கோட்பாடுகளை எதிர்த்து அதிலிருந்து விடுபட்டு சுதந்திர பறவையாக பறக்க நினைக்கும் மரியாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர்..
அந்தப் பெண்ணின் கோணத்தில் இருந்து..
அவளின் பேராசை.. அவளின் ஏக்கம் அவளின் இச்சை என பல பாகங்களாக பிரித்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஸ்டோரி…
பெற்றோரின் வற்புறுத்தலால் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட சாய் ஸ்ரீ பிரபாகரன் ஒரு கட்டத்தில் தன் தங்கை வீட்டுக்கு வருகிறார்.. அப்பொழுது தன் தங்கை அவன் காதலனுடன் லிவிங் கில் இருக்கிறார்.. இதை பார்த்து இவளுக்குள் காமம் எட்டி பார்க்கிறது.. அவனுடன் உறவு கொள்கிறார்..
இதனால் கன்னியாஸ்திரிக்கு வரும் பிரச்சனைகள் தான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
கதை நாயகியாக மரியா கேரக்டரில் சாய்ஸ்ரீ பிரபாகரன்..
ஸ்டார் வேல்யூ நட்சத்திரங்கள் தொட மறுக்கும் கேரக்டரை சவாலாக எடுத்து ஹீரோயின் சாய்ஸ்ரீ சபாஷ் பெறுகிறார்.. கன்னியாஸ்திரியாக கஷ்டப்பட்டு சாதாரண பெண்ணாக வாழ நினைக்கும் பெண் உணர்வுகளை உடல் மொழியில் சொல்லி இருக்கிறார்..
ஒரு காட்சியில் இவரின் அம்மாவை பார்த்து.. “இயேசுவை வணங்கும் நீ கன்னியாஸ்திரி ஆக இருந்திருக்கலாமே.. நீ எல்லா உடல் ஆசைகளையும் செய்து என்னைப் பெற்றுக் கொண்டு என்னை மட்டும் ஆசையை அடக்க சொல்வது ஏன் என்று கேட்கும் காட்சி.? வேற லெவல்..
சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவராக பாவல் நவகீதன்.. பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி பக்கபலமாக இருந்திருக்கிறார்.. ஆன்ட்டி கிறிஸ்டியன் பத்தி இவர் பேசும் வசனங்கள் பலே..
நாயகியின் உறவினராக சிது குமரேசன், அவரது காதலராக விக்னேஷ் ரவி.. இதில் விக்னேஷின் காம ஏக்கங்கள் ப்ளே பாய் கேரக்டர் ரகம்.. இவரோ இருப்பது லிவிங் ரிலேஷன்.. இதில் மரியாவை திட்டும் ஒரு காட்சி ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை..
இவர்களுடன் பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என உள்ளிட்டோர் சப்போர்ட்டிங் கேரக்டரில் சிறப்பு..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி..
ஒரு வீடு அதில் இருட்டான ஒரு ஹால்.. என ஒட்டுமொத்த படத்தையும் ஒரு இருட்டு அறைக்குள் முடித்திருப்பது ஒளிப்பதிவாளரின் கேமரா கைவண்ணத்தை காட்டி இருக்கிறது.
இசையமைப்பாளர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசை ஓகே..
திரைப்படமாக இருந்தாலும் படத்தின் பெரும்பால காட்சிகள் டாக்குமென்றே அளவிலேயே நகர்கிறது..
எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி கே.சுதன்.. கிறிஸ்து மதம் மீது என்ன கோபமோ.? இப்படி கிழித்திருக்கிறார் இயக்குனர்.. கன்னியாஸ்திரி சாதாரண பெண் தான்.. அவளுக்கும் எல்லாம் காதல் காம ஆசைகளும் இருக்கும் என்பதை ஒரு பெண் பார்வையில் இருந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஹரி கே.சுதன்..
எல்லா ஆசைகளும் துறந்து சொர்க்கத்துக்கு செல்வதற்கு பதிலாக எல்லாவற்றையும் அனுபவித்து நரகத்திற்கு செல்வது மேல் என்ற பெண் பார்வையில் இருந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி கே.சுதன்..
Maria movie review