சைலன்ஸ் டூ வயலென்ஸ் – DC – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹீரோ லோகேஷ் கனகராஜ்
சைலன்ட் டூ வயலெண்ட் – DC – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹீரோ லோகேஷ் கனகராஜ்
‘மாநகரம்’ என்ற படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதனையடுத்து கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் ஆஸ்தான இயக்குனராக மாறினார் லோகேஷ் கனகராஜ்..
விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களில் இணைந்தார்.. அதன் பிறகு கமல்ஹாசனுடன் விக்ரம் – ரஜினியுடன் கூலி உள்ளிட்ட படங்களில் இயக்குனராக இணைந்து இந்தியா முழுக்க பிரபலமானார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது இவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் DC டிசி என்ற திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது..
இதில் நாயகியாக வாமிகா கெபி நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..
நாயகனின் கேரக்டர் பெயர் தேவதாஸ் நாயகியின் கேரக்டர் பெயர் சந்திரா.. இரண்டு பெயர்களின் ஆங்கில முதல் எழுத்து தான் டிசி DC
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.. அனிருத் இசையமைக்க முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ஜிகே பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார்.. கலைப் பணிகளை கண்ணன் கையாண்டுள்ளார்..
சமீபத்தில் 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு பெற்ற கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.. படத்தின் டிரைலரிலும் ரத்த காட்சிகள் அதிகம்.. இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள்..
இந்தப் படம் தொடர்பாக பிரஸ்மீட் எதுவும் நடைபெறவில்லை..
ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் டிசி படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
சைலன்டாக வந்து வைலண்டாக வெற்றி பெற படக்குழு குறி வைத்துள்ளது எனலாம்..
Lokesh and Wamiqa starring DC movie release updates

