‘கோழிப்பண்ணை செல்லதுரை’ தங்கை சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ தங்கை சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது

 

 

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ தங்கை சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது

 

சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, சத்யதேவி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை.

ரகுநந்தன் இசையமைத்து இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாக்களில் அங்கீகாரமும் பெற்றது. திரையரங்குகளில் வெளியான பிறகு, “ அண்ணன் தங்கை பாசத்தை… பெற்றோர் இல்லாத குழந்தைகளின் மனநிலையை உறவுகளின் மேன்மையை, சொன்னது இந்த திரைப்படம்” என அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் படத்துக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரையில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றுள்ளது..

Kozhipannai Chellathurai movie got one more international award