FIRST ON NET ராதிகாவுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. சென்ட்ராயன் சொன்ன (கெட்ட) வார்த்தை.. – கீர்த்தி
FIRST ON NET ராதிகாவுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. சென்ட்ராயன் சொன்ன (கெட்ட) வார்த்தை.. – கீர்த்தி
கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ரிவால்வர் ரீட்டா..
சந்துரு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே எல் எடிட்டிங் செய்து இருக்கிறார்..
இந்த திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் பட குழுவினர்.
பேஷன் ஸ்டுடியோ சார்பாக சுதன் மற்றும் ஜெகதீஷ் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தில் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது..
“அனைவருக்கும் வணக்கம்.. இந்த படத்தின் கதையை சந்துரு சொன்னபோது பிடித்து விட்டது.. கதை சொல்லும் போது சிரித்துக் கொண்டே ரசித்து கேட்டேன்.. இந்த படத்தில் நடிக்க என்னை ரீட்டாவாக தேர்ந்தெடுத்த சந்துருவுக்கு ரொம்ப நன்றி.
அவர் நல்ல இயக்குனர்.. அவருக்கு நல்ல ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது.. இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி அனைவரும்.. நான் சினிமாவில் அறிமுகமானபோது இது என்ன மாயம் என்ற படத்தில் ராதிகா நிறுவனம் சார்பாக அறிமுகமானேன்.
இந்த படத்தில் முதல் முறையாக ராதிகாவுடன் இணைந்து நடித்து உள்ளேன். ஒரு சீனியர் நடிகையுடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. எனக்கும் அவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது.. அவர் செட்டில் வந்தால் ஒரு ஃபயர் போல இருப்பார்.
எனக்கும் அகஸ்டினுக்கும் இந்த படத்தில் ஒரு காட்சி இருக்கிறது.. அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சி அந்த காட்சியிலும் ராதிகா ஸ்கோர் செய்துவிட்டார்.

ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம்.. இந்த படத்தில் எல்லாரும் Gun துப்பாக்கி வைத்திருக்கிறோம்.. ஆனாலும் படத்தில் காமெடி நன்றாக இருக்கும்
சென்ட்ராயன் பேசும்போது (..தா) என்ற ஒரு வார்த்தை பற்றி பேசினார்.. அந்த வார்த்தை Mute செய்யப்பட்டு விட்டது.. அந்த ஒரு வார்த்தை தான் உங்கள் உங்கள் நடிப்பை போற்றும் என்பதல்ல.. அந்த எல்லாருக்கும் புரிந்த ஒரு வார்த்தை தான்.. அது இல்லாமல் உங்களுடைய நடிப்பு போற்றப்படும்.
எனக்கு தங்கையாக நடித்த நடிகைகள் மற்றும் அனைவரும் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.. இந்த படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது.. உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் வேண்டும். ” என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்..

நடிகர் சென்ட்ராயன் பேசும்போது..
“இந்த படத்தில் பாபு என்ற ஒரு கேரக்டர் இருப்பதாக சொன்னார்.. ஆனால் அதன் பிறகு அந்த கேரக்டரை அகஸ்டினுக்கு கொடுத்துவிட்டார்.. எனக்கு —தா குமார். என்ற கேரக்டர் பெயர் தந்தார்.. அந்த தா என்ற வார்த்தையை மட்டும் கிட்டத்தட்ட 3000 முறை சொல்லி இருப்பேன்..
அது ஒரு கெட்ட வார்த்தை.. ஆனால் அது இன்று சோசியல் மீடியா youtube இன்று எல்லா தளத்திலும் ஒரு தட்டு தட்டினால் அந்த வார்த்தை வரும்.. ஆனால் சென்சாரில் அந்த வார்த்தையை கட் செய்ய சொல்லி விட்டார்கள்.. என் கேரக்டர் நன்றாக வந்துள்ளது.. எனக்கும் கீர்த்தி சுரேஷ்-க்கும் கார் ஓட்டும் காட்சி இருக்கிறது.. கீர்த்தி சுரேஷ் என்னைவிட பயங்கரமாக கார் ஓட்டி சேஷிங் செய்தார்.. படம் நன்றாக வந்திருக்கிறது.. அனைவரும் பார்த்துவிட்டு வாழ்த்துங்கள்.. நன்றி..
Keerthy Suresh speech at Revolver Rita pre release event

