ஆஸ்கார் விருது பெற்ற இந்திய  நிறுவனத்துடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் 

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய  நிறுவனத்துடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் 

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய  நிறுவனத்துடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்

 

 

 

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது..

 

குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது..

 

பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ‘தி லஞ்ச்பாக்ஸ்’, ‘மசான்’, ‘பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ‘காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம்..

 

தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும்.

 

கடந்த பத்தாண்டுகளில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘இறைவி’, ‘மெர்குரி’, ‘ஜகமே தந்திரம்’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ மற்றும் ‘ரெட்ரோ’ என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்..

 

இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது…

“பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்..

அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

 

Karthik Subbaraj joins forces with Guneet Monga Kapoor and Achin Jain at Sikhya Entertainment #Oscar winning powerhouse defined by homegrown Indian stories that travel the world.