காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்.. காந்தமாய் கவர்ந்த விஷுவல் ட்ரீட்

காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்.. காந்தமாய் கவர்ந்த விஷுவல் ட்ரீட்
காந்தாராவில் ரிஷப் ஷெட்டி கேரக்டர் ஓரிடத்தில் காணாமல் போகும். அந்த இடத்திலிருந்தே காந்தாரா சாப்டர் – 1 கதை ஆரம்பம்..
ஸ்டோரி…
காந்தாரா என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வாழும் காட்டுப்பகுதியை அழிக்க நினைக்கிறார் பாங்ரா என்ற தேசத்து அரசர்,
ஆனாலும் எதற்கும் அஞ்சாமல் தெய்வத்தை மட்டுமே நம்பி வாழும் காந்தார மக்கள் படைகளை ஓட விடுகிறார்கள்..
மீண்டும் பல ஆண்டுகளுக்குபின் அரசரின் வாரிசுகள் காந்தாராவை கைப்பற்ற நினைக்கிறார்கள். அந்த மக்கள் நம்பும் அந்த தெய்வீக சக்தியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள்..
இதனை எதிர்க்கும் நாயகன் ரிஷப் எப்படி காந்தாராவின் தலைவன் ஆனார்.? குல தெய்வமான குலிகா மற்றும் சிவன் ஆசியுடன் எப்படி மக்களை மீட்டார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..
இதனிடையில் ஒரு மர்மமான இடத்தில் முன்னோர்கள் மறைகிறார்கள் என்கிற புராணக் கதை சொல்கிறார்…
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த், குல்சன்தேவய்யா, ஜெயராம்
மதராஸி படத்தில் நாம் ரசித்த ருக்மணி வசந்த் இதில் கதாநாயகி.. முதல் பாதியில் அழகு பதுமையாக வரும் இரண்டாம் பாதியில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
வழக்கம்போல ஜெயராம் தன் அனுபவ நடிப்பில் நம்மை ரசிக்க வைக்கிறார்
ஒளிப்பதிவு : அரவிந்த் காஷ்யப்.. கிராபிக்ஸ் காட்சிகளுடன் அழகிய விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்..
இசை: அஜனீஸ் லோக்நாத்
பாடல்களும் பின்னல் இசையும் மிரட்டல்.. பின்னணி இசையில் நம் உணர்வுகளை தட்டி எழுப்பி காந்தாராவோடு காந்தமாக நம்ம ஈர்த்துவிட்டார் அஜனீஸ்..
முதல் பாகத்தில் ஹிட்டான வாரக ரூபம்
தெய்வ சடங்குகள் கிளைமாக்சிலும் வந்து மெய்சிலிர்க்க வைக்கும்..
தயாரிப்பு: ஹோம்பாலே பிலிம்ஸ்
இயக்கம்: ரிஷப் ஷெட்டி.. இவரே நாயகன் இவரே இயக்குனர்.. இரண்டையும் இரண்டு தோள்களில் சுமந்து காந்தாராவை கனகச்சிதமாக கொடுத்திருக்கிறார்.
மலைவாழ் மக்களின் மொழி புரியாமல் சப்டைட்டில் போடப்பட்டாலும் அதை படிப்பதற்குள் காட்சிகளில் ஒன்ற முடியவில்ல… இடைவேளை வரை புரியாமல் போனாலும் பிறகு நம்ம சீட்டு நுனியில் உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி..
அனுஷ்கா தமன்னாவை பார்த்து பிரபாஸ் செய்யும் சேட்டைகளை போல ரிஷப் நாயகி ருக்மணியை பார்த்து செய்கிறார்.. இது பாகுபலியை நினைவுப்படுத்துகிறது..
ஜெயராமின் மகன் அரசர் குல்சன் தேவய்யா நடிப்பு கோமாளி போல காட்டப்பட்டாலும் அசத்தல்.. இவரது முடிவு எதிர்பாராத ஒன்று.. நாயகன் உடலுக்குள் குலிகா தெய்வம் வந்து குல்சனை கொல்லும் காட்சி ஆக்ரோஷத்தின் உச்சக்கட்டம்.. மிரட்டல் நடிப்பு.. தமிழ் நடிகர்கள் முயற்சி செய்வார்களா.?
ருக்மணியின் கிளைமாக்ஸ் அவதாரம் வேற லெவல்..
இதுபோல பிரம்மாண்ட படத்தில் நடிகர்களை விட டெக்னீசியன் உழைப்பு அபாரமானது. அவர்களின் பணி ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது..
பிரமாண்ட செட், ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், இசை இப்படி ஒவ்வொன்றும் அசத்தல்..
முக்கியமாக ஆர்ட் டைரக்டர் தரணி ம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்து செல்கிறார். அரண்மனை, தர்பார், காந்தாரா காட்டுப்பகுதிகள், தேர் ஓடும் காட்சி, தெய்வ சக்தி ஹீரோ அவதாராம், கிளைமாக்ஸ் பைட் என ஒவ்வொன்றும் வியக்க வைக்கிறது…
Kantara Chapter 1 movie review
—