நடிகை கனகா தந்தை ‘ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனர் SS தேவதாஸ் காலமானார்.

நடிகை கனகா தந்தை ‘ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனர் SS தேவதாஸ் காலமானார்.

நடிகை கனகா தந்தை ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனர் SS தேவதாஸ் காலமானார்.

 

ஜனாதிபதி விருது பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் தேவதாஸ் அவர்கள் தன்னுடைய 88 ஆவது வயதில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் 30 11 2025 இரவு 10:30 மணி அளவில் காலமானார்.

இவர் ஆகஸ்ட் 3 – 1938 ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் எஸ் எம் எஸ் சுந்தரராமன் ருக்மணி அவர்களின் புதல்வர்களில் ஒருவர்.

திரைப்பட இயக்குனர்
ஏ பீம்சிங் அவர்களிடம் பல பா வரிசை வெற்றி படங்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து நற்பெயரை சம்பாதித்துக் கொண்டதுடன் திரையுலகில் பிரபல நடிகை தேவிகா அவர்களின் காதலை சம்பாதித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதியருக்கு கனக மகாலட்சுமி என்ற பெயர் கொண்ட நடிகை கனகா உண்டு. (கரகட்டக்காரன் பட நாயகி.)

வெகுளிப் பெண் தமிழிலும் தெலுங்கிலும் தயாரித்து இயக்கினார் மற்றும் மலையாள படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் தீவிர ஐயப்ப பக்தர் குருசாமி எம் என் நம்பியார் அவர்களின் அன்பை பெருமளவில் பெற்றிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு மேல் சபரிமலைக்கு சென்று ஐயப்பனின் முழு அருளை பெற்றிருக்கிறார்.

கார்த்திகை மாதத்தில் இவர் மனித வாழ்க்கையை புனித வாழ்க்கையாக நிறைவு செய்து கொண்டிருக்கிறார்.

ஆழ்ந்த இரங்கலுடன் சினிமா ஜுட்டி குடும்ப உறுப்பினர்கள் சார்பாக இந்த பதிவு செய்தவர்

ஜுட்டிசன்ஸ் சுட்டி ராமாச்சாரி ஈஸ்வர்லால்.

9500433595

30-11-2025
இரவு மணி 11-50.

 

Kanaga father Director SS Devadass passed away