Kingston 20 கோடி பட்ஜெட்.. நீருக்கு அடியில் ஷூட்டிங்.. 3000 VFX Shots.. முதல் படத்திலேயே கலக்கும் கமல்
Kingston 20 கோடி பட்ஜெட்.. நீருக்கு அடியில் ஷூட்டிங்.. 3000 VFX Shots.. முதல் படத்திலேயே கலக்கும் கமல்
இயக்குனர் கமல் பிரகாஷ் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்..
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் மார்ச் 7ல் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை குறித்து இயக்குனர் கமல் பிரகாஷ் பகிர்ந்து கொண்டது,
“படத்தில் 3000 விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் செட் படம் இது. சிஜி சிக்கல்களை தவிர்ப்பதற்காக
பேய் கதாப்பாத்திரத்தில் வருபர்களுக்கு தத்ரூபமாக மேக்கப் போடப்பட்டுள்ளது.. அந்த மேக்கப்பை அதை அகற்ற 8 மணி நேரம் செலவிட்டனர்..

பிரமாண்டமான செட்டில் 21 நாட்கள் படப்பிடிப்பு நடைப்பெற்றது.பெரிய அமைப்பில் மழை, பனி போன்ற செட்டப் அமைக்கப்பட்டது. ஆனால் 21 நாட்களிலேயே நாங்கள் படத்தின் இரண்டாம் பாதியை முடித்துவிட்டோம்.
நாங்கள் நீருக்கடியில் படப்பிடிப்பு செய்தோம். இதற்காக கேமராவிற்காக பம்பாய் குழுவிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்தோம்.இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.
ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது.
Kamal Prakash shares his thrilling experience of Kingston

