’கலன்’ திரைப்பட விமர்சனம்

’கலன்’ திரைப்பட விமர்சனம்
ஸ்டோரி.. :
சிவகங்கையை சேர்ந்த வெட்டுடையார் காளி (தீபா) கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார்.
இந்த நிலையில் அந்த ஊரில் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமை ஆகிறார்கள்.. இது தட்டிக் கேட்கிறார் வேங்கை..
எனவே வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால் அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்கிறது.
தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சாவினால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் தீபா தன் தம்பி அப்பு குட்டியுடன் இணைந்து போராடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? அவர்களை எதிர்த்து சாதிக்க முடிந்ததா? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்..
வெட்டுடையார் காளி என்ற கேரக்டருக்கு மிகப்பெரிய கணம் சேர்த்து இருக்கிறார் தீபா.. பாசமிக்க அம்மா.. பொறுப்பான பெண்மணி என்பதை உணர்ந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிவ் தவிர்த்து இருக்கலாம். குற்றங்களில் ஈடுபடும் கூட்டத்திற்கு ஒரு சமூகப் பொறுப்புள்ள பெண்ணாக எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
பாசம் மிக்க தம்பியாக தரமான நடிப்பை அப்புக்குட்டி கொடுத்திருக்கிறார்.. ஆனால் இவரது கேரக்டருக்கு இன்னும் வலு சேர்த்து இருக்கலாம்.
வில்லனாக வெறித்தனமான லுக்கில் அசத்தியிருக்கிறார் சம்பத் ராம்.. இவரது உயரமும் தோற்றமும் மிரட்டலாக இருக்கிறது..
கஞ்சா வியாபாரியாக திமிரான பெண்ணாக கலக்கியிருக்கிறார் காயத்ரி.
வேங்கை கதாபாத்திரத்தில் யாசர் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
காவல்துறை அதிகாரியாக சேரன் ராஜ்.. இவர் நல்லவரா கெட்டவரா என்பதை தெரியாத வகையில் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. வேங்கையின் நண்பராக நடிகர் & மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவர்களும் பொருத்தமான தேர்வு..
இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..
“வெட்டுடையார் காளி..” பாடலும், அதை படமாக்கிய விதமும் செம.. இந்தப் பாட்டைப் பார்த்து தியேட்டரில் சிலருக்கு சாமி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..
குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் ஆகியோரது பாடல் வரிகள் அருமை.
ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே மக்களின் வாழ்வியலை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..
இது போன்ற குடும்ப செண்டிமெண்ட் படங்களில் ரத்தம் கலந்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.. வன்முறை காட்சிகள் நிறைய இருக்கிறது..
விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் ஆகியோரது படத்தொகுப்பு நன்று..
கலை இயக்குநர் திலகராஜன் அம்பேத், நடன இயக்குநர் வெரைட்டி பாலா ஆகியோரும் சிறப்பு..
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் வீரமுருகன்… இவரது பெயரிலே வீரமும் தெய்வீகமும் கலந்திருப்பதால என்னவோ படத்திலும் வீரமும் ஆன்மீகமும் படம் முழுக்க கலந்திருப்பதை உணர முடிகிறது..
சமூகத்தில் நடக்கும் போதை விழிப்புணர்வு படத்தை கொடுத்திருக்கிறார்.. என்னதான் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் சட்டத்தை மக்கள் கையில் எடுக்கக் கூடாது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்..
மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
பல இடங்களில் சாதி ரீதியான குறியீடுகள் இருப்பதை இயக்குனர் வீரமுருகன் தவிர்த்து இருக்கலாம்.. ஏனென்றால் இந்தக் கலன் சாதிய படமாக காட்டப்படும்..
Kalan movie review
——–