இறுதி முயற்சி விமர்சனம் 3.25/5.. கந்து வட்டியால் நொந்து போன நாயகனின் இறுதி முயற்சி

இறுதி முயற்சி விமர்சனம் 3.25/5.. கந்து வட்டியால் நொந்து போன நாயகனின் இறுதி முயற்சி

 

இறுதி முயற்சி விமர்சனம் 3.25/5.. கந்து வட்டியால் நொந்து போன நாயகனின் இறுதி முயற்சி

 

ஸ்டோரி…

ரஞ்சித் – மெகாலி.. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள்.. ரூ. 80 லட்சத்தை கடன் வாங்கி தன் ஜவுளி தொழிலில் முதலீடு செய்கிறார் ரஞ்சித்.. ஆனால் தொழில் நஷ்டம் அடைந்ததால் திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையை வட்டி மேல் வட்டியாகி ஒரு கோடியை தாண்டி விடுகிறது..

இதனால் ஒரு வாரம் கெடு விதித்து செல்கிறார் வில்லன்.. இல்லை என்றால் உன் மகளையும் உன் மனைவியையும் கடத்தி விடுவேன் என மிரட்டுகிறார்.

எவ்வளவோ முயற்சித்தும் யாரும் உதவ முடியாத நிலையில் வேறு வழியின்றி இறுதி முயற்சியாக தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ரஞ்சித்.. இதற்கு மனைவி மெகாலி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது.? தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது தன்னம்பிக்கையுடன் தொழில் செய்து கடனை அடைத்தார்களா.? இவர்களின் வாழ்வியல் என்ன என்பதே மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ரஞ்சித் – ரவிச்சந்திரன் – நாயகன்*

மெகாலி மீனாக்க்ஷி – வாணி – நாயகி

தன்னுடைய அனுபவ நடிப்பில் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார் ரஞ்சித்.. கடனை அடைக்க முடியாமல் தவிப்பது தற்கொலைக்கு துடிப்பதும் என கடன்காரனின் உணர்வை அருமையாக கடத்தி செல்கிறார்..

நாம் செய்த பாவத்திற்கு குழந்தைகளை கொல்வது நியாயமா என மெகாலியின் மென்மையான நடிப்பு மனதை கவர்கிறது.. அழகான அம்சமான இல்லத்தரசியாக மனதில் நிறைகிறார்..

மௌனிகா – கௌரி – நாயகனின் மகள்

நீலேஷ் – குமரன் – நாயகனின் மகன்

இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் தங்கள் பாத்திரங்களில் சிறப்பு..

விட்டல் ராவ் – ராஜப்பா – வில்லன்

புதுப்பேட்டை சுரேஷ் – காத்தவராயன் – வில்லனின் தம்பி

கந்து வட்டி கும்பலின் திமிரை ஆணவத்தை இவர்களின் நடிப்பில் காண முடிகிறது…

டெக்னீசியன்ஸ்…

படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ்

ஒளிப்பதிவு – சூர்யகாந்தி

இசை – சுனில் லாசர்

ஒளிப்பதிவு இசை எடிட்டிங் பணிகள் கச்சிதம்..

எழுத்து & இயக்கம் – வெங்கட் ஜனா

தயாரிப்பு நிறுவனம் – வரம் சினிமாஸ்

தயாரிப்பு – வெங்கடேசன் பழனிச்சாமி

கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன்

பாடல்கள் – மஷூக் ரஹ்மான்

விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி

PRO – வேலு

லட்சக்கணக்கில் பணம் பெற்று தொழில் நஷ்டமடைந்த தொழிலதிபர்களின் கடன் வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா..

கந்து வட்டி & மீட்டர் வட்டி கும்பலால் ஒரு குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பதை கடன் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை பதிவாக கொடுத்திருக்கிறார்..

படம் முழுக்க சோகமே காணப்பட்டாலும் கதையை வேறு எங்கு கமர்சியல் பாதைக்கு திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தை படம் தொடங்கியது முதல் இறுதி வரை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் வெங்கட் ஜனா..

 

Irudhi Muyarchi movie review