‘கருப்பு’ இசை விழா.. இன்னொரு சித்திரை திருவிழா.. த்ரிஷா ஆப்சென்ட்..; நான் ஹீரோ இல்லை.. – சூர்யா பேச்சு

‘கருப்பு’ இசை விழா.. இன்னொரு சித்திரை திருவிழா.. த்ரிஷா ஆப்சென்ட்..; நான் ஹீரோ இல்லை.. – சூர்யா பேச்சு

‘கருப்பு’ இசை விழா.. இன்னொரு சித்திரை திருவிழா.. த்ரிஷா ஆப்சென்ட்..; நான் ஹீரோ இல்லை.. – சூர்யா பேச்சு

 

 

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’… சாய் அபயங்கர் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஏப்ரல் 26 ஆம் தேதி மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது..

சமீபத்தில் சினிமா மற்றும் அரசியல் உலகில் பரபரப்பாக பேச படும் திரிஷா இந்த விழாவுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.. ஆனால் திரிஷா ஆப்சன்ட்

நடிகர் சூர்யா பேசும்போது…

“எனக்கு மதுரை எப்போவுமே ஸ்பெஷல். மதுரை மண்ணுக்கு நான் கடன்பட்டுள்ளேன். இங்கு வந்து நிறைய படங்கள் பண்ணியிருக்கேன்.. மதுரை சித்திரை திருவிழாவுக்கு லட்சம் பேர் வருவார்கள். அந்த மாதிரி ‘கருப்பு’ இசை விழாவினை இன்னொரு சித்திரை திருவிழாவாக பார்க்கிறேன்.

இதில் நடித்துள்ள இந்திரன்ஸ் மிகவும் திறமையானர். அவர் அர்ப்பணிப்புக்கு எல்லையே இல்லை.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் திறமைசாலி. அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.. .

’கருப்பு’ படம் இவ்வளவு தூரம் வருவதற்கு கருப்புசாமி கடவுள் தான் காரணம்.. நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும்.

ஆர்.ஜே.பாலாஜி பன்முகத் திறமைசாலி.. நான் என்னை சூர்யாவாக பார்க்கிறேன்.. ஆனால், அவர் தன்னை இயக்குநர், நடிகர், வர்ணனையாளராக பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இப்படி நடிக்க வைத்ததற்கு ஆர்.ஜே.பாலாஜிக்கு நன்றி..

கருப்பு படம் முதல் பாதி ரொம்ப எமோஷனலாக இருக்கும்.. இரண்டாம் பாதி கொண்டாடும் தருணங்கள் அதிகம்..

மே 14-ம் தேதி கருப்பு படம் உங்கள் கையில் தான் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும்.. ” என்று பேசினார் சூர்யா..

In Karuppu movie i am not hero says Suriya