120 ஆண்டு கால சினிமாவில் ரெக்கார்டு மேக்கர் ரஜினி..; இனி எவராலும் முடியாது..

120 ஆண்டு கால சினிமாவில் ரெக்கார்டு மேக்கர் ரஜினி..; இனி எவராலும் முடியாது..

 

 

120 ஆண்டு கால சினிமாவில் ரெக்கார்டு மேக்கர் ரஜினி..; இனி எவராலும் முடியாது

 

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரப், ஹிருத்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன், நமோ நாராயணன், சூரஜ் வெஞ்சரமோடு, பகவதி பெருமாள் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ‘ஜெய்லர் 2’.

நெல்சன் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருந்தார்..

www.rightnewsraja.com

இந்த படம் கடந்த மாதம் அக்டோபர் 15ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியானது.. படத்தின் முதல் நாள் தொடங்கி பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது வரை உலக அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படம் வெளியாகி 18 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது வரை ₹ 810 கோடியை உலக அளவில் கடந்துள்ளது..

www.rightnewsraja.com

தமிழ் சினிமாவில் 800 கோடியை கடந்து எந்த படமும் வசூல் சாதனை செய்ததில்லை.. 120 ஆண்டு கால தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் புதிய ரெக்கார்டு படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் இந்த படம் இன்னும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் ஜெயிலர் 2 திரைப்படம் ₹1000 கோடியை கடந்து தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவில் ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரெக்கார்டு உருவாக்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஏற்கனவே ஹிந்தி தெலுகு மற்றும் கன்னடம் திரைப்படங்கள் ₹1000 கோடியை கடந்துள்ளது.. எனவே தமிழ் சினிமாவும் ₹1000 கோடி வசூலை கடந்தால் அந்த பெருமைக்கு உரிய ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையல்ல..

இனி அடுத்த வேறு ஒரு நடிகரால் இந்த சாதனையை கடக்க முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..

 

In 120 years of Tamil Cinema Rajini in Jailer 2 makes record

 

——