ஹாலிவுட்டில் நடித்த தமிழ் பட விமர்சகர் சத்யேந்திரா மரணம்.. அறக்கட்டளை சார்பில் அடக்கம்

ஹாலிவுட்டில் நடித்த தமிழ் பட விமர்சகர் சத்யேந்திரா மரணம்.. அறக்கட்டளை சார்பில் அடக்கம்

 

ஹாலிவுட்டில் நடித்த தமிழ் பட விமர்சகர் சத்யேந்திரா மரணம்.. அறக்கட்டளை சார்பில் அடக்கம்

 

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சத்யேந்திரா.. இவரை தமிழ்நாட்டில் உள்ள பல youtube நபர்களுக்கு தெரியும்.. முக்கியமாக இவர் தமிழ் படங்களை விமர்சனம் செய்வதில் வல்லவர்..

65, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 15 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு ஹாலிவுட் மற்றும் ஜெர்மன் மொழி படத்தில் நடித்துள்ளார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மொழிப் பெயர்ப்பாளர், விமர்சகர், ஆசிரியர் என பல்வேறு முகம் கொண்ட இவர், உடல்நிலை சரியின்றி கடந்த 28 ம் தேதி சென்னையில் காலமானார்.. இந்த செய்தியை சில மணி நேரங்களுக்கு பிறகு தான் மீடியா தரப்பில் தெரிய வந்தது..

இவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.. இவரது மரணம் செய்தி அறிந்த இயக்குனர் நடிகர் மிஷ்கின் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருந்தார்..

அவருக்கு குடும்ப உறவினர்கள் யாரும் இல்லாததால், உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக இதையடுத்து இன்று மாலை ‛உதவும் கைககள்’ அறக்கட்டளை சார்பில், அண்ணாநகரில் சத்யேந்திரா உடல் தகனம் செய்யப்பட்டது..

 

Hollywood Tamil Actor Sathyendra passed away