‘சிறை’ உடன் நிறை-வடையும் தமிழ் சினிமா.; பிரபல இயக்குனர்களின் பிரம்மாண்ட பாராட்டு.!
‘சிறை’ உடன் நிறை-வடையும் தமிழ் சினிமா.; பிரபல இயக்குனர்களின் பிரம்மாண்ட பாராட்டு.!
‘சிறை’ படத்தை பாராட்டி நெகிழும் இயக்குனர்கள் ஷங்கர் – அமீர் – மாரி செல்வராஜ்
2025 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘சிறை’.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ள இந்த படத்தில் கதை நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்..
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகனான எல்.கே. அக்ஷய்குமார் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.. அனிஷ்மா நாயகியாக நடித்துள்ளார்.. இந்த காதல் ஜோடியின் நடிப்பை அனைவரும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியில் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படத்தைப் பார்த்த பிரபல இயக்குனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.. சமீபத்தில் அமீர் இந்த படத்தை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதுபோல பிரபல இயக்குனர் மாரி செல்வராஜும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பாராட்டி உள்ளார்..

அவரின் பாராட்டில்…
ஒரு சிறந்த திரைப்படம் சிறை. பல காட்சிகள் கண்ணீர் வரை வைத்தது. அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது..
விக்ரம் பிரபுவுடைய அழுத்தமான நடிப்பும், அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்மா அனில்குமார் கதாபாத்திரங்களின் வெகுளித்தனம் கலந்த உணர்வுப்பூர்வமான நடிப்பும் அழகாக இருந்தது..
தன்னுடைய முதல் படத்திலே அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜ்குமார் நம் மனங்களை சிறைப்படுத்தி விட்டார். இந்த படத்தினை தயாரித்த லலித்குமாருக்கு வாழ்த்துக்கள். படத்துடைய கிளைமேக்ஸ் காட்சியில் கூறப்பட்ட செய்தி வலிமையானதாகவும், பொருத்தமான ஒன்றாகவும் இருந்தது. இந்த ஆண்டின் இறுதியில் முக்கியமான படத்துடன் தமிழ் சினிமா நிறைவடைகிறது” என மனம் சிறை படத்தினை பாராட்டியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
Directors Shankar Ameer Mari Selvaraj praises Sirai movie
—

