KILLER மீண்டும் இயக்குனராக எஸ்.ஜே.சூர்யா..; ரஹ்மான் உடன் கூட்டணி
KILLER மீண்டும் இயக்குனராக எஸ்.ஜே.சூர்யா..; ரஹ்மான் உடன் கூட்டணி
25 வருடங்களுக்கு முன்பு இயக்குனராக அறியப்பட்ட எஸ் ஜே சூர்யா கடந்த 10 வருடங்களாக நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் டைரக்டராக உருவெடுக்க தொடங்கியுள்ளார்..
இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்..
நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்க இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா கம்பேக் கொடுத்து இருக்கிறார் என்று பாராட்டி வருகின்றனர்..
Director SJ Surya comeback with Killer posters

