தனுஷூக்கு ஜோடியாகும் பிரதீப் ரங்கநாதன் & சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்ஸ்

தனுஷூக்கு ஜோடியாகும் பிரதீப் ரங்கநாதன் & சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்ஸ்

தனுஷூக்கு ஜோடியாகும் பிரதீப் ரங்கநாதன் & சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்ஸ்

 

ஒரு பக்கம் இயக்குனர் மறுபக்கம் ஹீரோ என பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.. இவர் இயக்கிய இட்லி கடை படத்தை தொடர்ந்து தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்..

‘போர் தொழில்’ இயக்​குநர் விக்​னேஷ் ராஜா இயக்​கிய ‘கர’ படத்​தில் நடித்து முடித்​துள்ளார்.. இதில் மமீதா பைஜு ஜோடியாக நடித்து வருகிறார்.. இவர் பிரதீப் ரங்கநாதன் நடித்து சூப்பர் ஹிட்டான டியூட் படத்தில் நாயகியாக நடித்தவர்..

இதையடுத்து தனுஷின் 55வது படத்தை ராஜ்கு​மார் பெரிய​சாமி இயக்​கு​கிறார். தனுஷின் வுண்​டர்​பார் பிலிம்ஸ் மற்​றும் ஆர்​டேக் ஸ்டூயோஸ் இணைந்து தயாரிக்​கிறது.

இப்​படத்​துக்​குச் சாய் அபயங்​கர் இசை அமைக்​க ஸ்ரீலீலா இ​தில் நாயகி​யாக நடிக்​கிறார்.

தெலுங்கு நடிகை​யான ஸ்ரீலீலா, சிவ​கார்த்​தி​கேயனின் ‘பராசக்​தி’ படம் மூலம் தமிழுக்கு வந்​தார்.. இது ஸ்ரீலீலாவின் நடிப்பு பலராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது..

மேலும் மெயின் ஹீரோயினாக சாய்பல்லவி இணைந்துள்ளார்.. இவர் ஏற்கனவே தனுஷ் உடன் மாரி 2 படத்தை நடித்துள்ளார்.. மேலும் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது..

 

Dhanush movie heroines Mamitha Baiju Sreeleela and Sai Pallavi

 

 

 

Related articles