‘குபேரா’ விழாவில் அந்த லுக் ஏன்.? ‘இட்லி கடை’ விழாவில் தனுஷ் சூப்பர் விளக்கம்
‘குபேரா’ விழாவில் அந்த லுக் ஏன்.? ‘இட்லி கடை’ விழாவில் தனுஷ் சூப்பர் விளக்கம்
தனுஷ் – நாகர்ஜூனா – ராஷ்மிகா இணைந்து நடித்த ‘குபேரா’ படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் சில நிமிடங்கள் சீரியசான முகத்துடன் காணப்பட்டிருந்தார்.
அந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி மீம்ஸ் வலம் வர தொடங்கியது.. சிலர் கிண்டல் அடித்தும் பேசி இருந்தனர்..
இந்த நிலையில் அந்த படத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை ‘ படத்தின் இசை விழாவில் அந்த படத்தின் இயக்குனரும் நாயகனுமான தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் டிடி, அந்தப் புகைப்படத்தை காட்டி இந்த சமயத்தில் என்ன சார் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி கேட்டார்…
அதற்கு தனுஷ், “நிறைய நடிகர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கும்..
நல்ல பாடல் கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப் பாடல் நினைத்து நடிகர்கள் அவர்களை அறியாமல் அதில் நடித்துப் பார்ப்பார்கள்.
நாங்கள் தெரிந்து பண்ண மாட்டோம், தெரியாமல் செய்துவிடுவோம்.
குபேரா நிகழ்ச்சியில் ‘ராயன்’ பட பாடலை குழந்தைகள் ரொம்ப அழகாக பாடிக் கொண்டிருந்தார்கள்..
அதை பார்த்து எங்கே இருக்கிறோம், என்ன பண்றோம் என தெரியாமல், ‘ராயன்’ கதாபாத்திரமாக நான் மாறிவிட்டேன்.. அந்த ரியாக்ஷன் தான் அந்த ஃபோட்டோ.. ” என பதில் அளித்தார் தனுஷ்.
மேலும் ‘ நான் சந்தித்த மற்றும் என்னைப் பாதித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனையாக உருவாக்கியது தான் ‘இட்லி கடை’.
சிலர் இன்னும் பவர்புல்லான டைட்டில் வைத்திருக்கலாமே என்றார்கள்.. சிலர் ஹீரோ பெயரையே டைட்டிலாக வைக்கலாமே என்றார்கள்… இதில் இட்லி கடை’தான் ஹீரோ” என்றார்.
தனுஷே இயக்கி நாயகனாக நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தயாரித்துள்ளார்.. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வருகிற செப்டம்பர் 20ந் தேதி கோவை ப்ரோஷன் மாலில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Dhanush explanations about Kubera audio launch still viral

