என் ஹேர் ஸ்டைலை ஃபாலோ பண்றாங்க.. ஆண்களுக்கு நிகராக பெண்கள் செய்யணும்… – ‘யோகி டா’ தன்ஷிகா

என் ஹேர் ஸ்டைலை ஃபாலோ பண்றாங்க.. ஆண்களுக்கு நிகராக பெண்கள் செய்யணும்… – ‘யோகி டா’ தன்ஷிகா

 

என் ஹேர் ஸ்டைலை ஃபாலோ பண்றாங்க.. ஆண்களுக்கு நிகராக பெண்கள் செய்யணும்… – ‘யோகி டா’ தன்ஷிகா

 

 

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்திருக்கும் படம் ‘யோகி டா’.

இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்..

இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகை சாய் தன்சிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 6-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது..

இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகை சாய் தன்சிகா, படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..

“நான் அதிகமாக பேச விரும்பவில்லை. பேச்சுக்கு பதிலாக செயலில் காட்ட விரும்புகிறேன். கபாலி படத்தில் போடப்பட்ட கெட்டப்பில் தான் யோகிடா படத்தில் நடித்திருக்கிறேன்..

கபாலி படம் பார்த்துவிட்டு மலேசியாவில் பல பெண்கள் என் போன்று ஹேர்ஸ்டைல் செய்தார்கள். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது..

இந்த படத்தில் 7 சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். ஆக்சன் காட்சிகளுக்கு எந்த டூப்பும் பயன்படுத்தவில்லை. ஒரு காட்சிக்காக 40 அடி உயரத்தில் தலைகீழாக கட்டி தொங்க வைத்தார்கள்.

பெண்களால் முடியாதது எதுவுமில்லை ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் முன்னேற முடியும்.. பெரும்பாலும் பெண்களை அடிமைப்படுத்த பாலியல் ரீதியாகவே பிரச்சனைகள் வருகிறது.. அதனை முறியடிக்கலாம் அது பெரிய காரியம் அல்ல.. பெண்களின் பிரச்சினை குறித்து பேசும் படம் தான் இந்த யோகி டா..

பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை. நம்மாலும் எல்லாம் முடியும். தைரியமாக முன்னே வாருங்கள். பார்த்துக் கொள்ளலாம்..” என்று பேசினார் சாய் தன்ஷிகா..

 

Dhanshika open talk about Yogi da movie and her hair style

 

 

 

 

Related articles