DD Next Level விமர்சனம்.. ஆவியிடம் சிக்கிய சினிமா விமர்சகர்

DD Next Level விமர்சனம்.. ஆவியிடம் சிக்கிய சினிமா விமர்சகர்
ஸ்டோரி…
சினிமா விமர்சகர்களால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன் தற்கொலை செய்து கொள்கிறார்.. இவர் ஆவியாக ஒரு தியேட்டருக்கு இருந்துக் கொண்டு சினிமா விமர்சகர்களை தியேட்டருக்கு வரவழைத்து துன்புறுத்துகிறார்.. ஒரு கட்டத்தில் சினிமா விமர்சகர் சந்தானமும் இவரிடம் சிக்கிக் கொள்கிறார்..
ஒரு கட்டத்தில் தன் அப்பா நிழல்கள் ரவி.. அம்மா கஸ்தூரி தங்கை யாஷிகா உடன் தியேட்டருக்கு செல்கிறார் சந்தானம்..
அங்கு சென்ற பின் அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதுதான் மீதிக்கதை.. அதிலிருந்து மீண்டாரா சந்தானம்.??
கேரக்டர்ஸ்…
சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி
வழக்கம் போல சந்தானம் சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.. இதில் அவரது கெட்டப் வொர்க் அவுட் ஆகவில்லை.. மற்ற காமெடி நடிகர்களுக்கும் ஸ்பேஸ் கொடுப்பது சந்தானத்தின் வழக்கம்..
நாயகி கீத்திகா அழகில் ஓகே என்றாலும் நடிப்பில் மெனக்கடல் தேவை..
அதன்படி கஸ்தூரி மற்றும் யாஷிகா ஆனந்தின் காமெடியும் கவர்ச்சியும் களைக்கட்டி உள்ளது.. கல்லாவும் கட்டும்..
கவுதம் மேனன் & நிழல்கள் ரவி இருவரும் தங்கள் பணியில் கச்சிதம்.. மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இருந்தாலும் சந்தானம் படத்தில் மாறன் காமெடி எடுபடாமல் இருக்குமா?? வெளுத்து வாங்கி இருக்கிறார்..
படத்தில் மிரட்டலான வில்லன் இல்லாதது பெரும் குறை..
டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு : நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள்
இயக்கம் : பிரேம் ஆனந்த்
தீபக் குமார் ஒளிப்பதிவு சிறப்பு.. ஆப்ரோ இசையில் பாடல்கள் சுமார்.. பின்னணி இசை இன்னும் பயமுறுத்தி இருக்கலாம்..
பொதுவாக ஒரு படத்தின் அடுத்தடுத்து பாகங்கள் வெளிவரும்போது அதை முதல் பாகம் இரண்டாம் பாகத்துடன் ஒப்பிடுவது வழக்கம்.. அதன்படி பார்த்தால் இந்த பாகம் வீக் தான்.. சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும் சிரிப்பு மழையை நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்..
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி சந்தானம் ரசிகர்களுக்கு காமெடி விருந்து வைக்க தவறிவிட்டார் இயக்குனர் பிரேம் ஆனந்த்..
DD Next Level movie review