JUST IN – YG மகேந்திரன் & KPY ராஜவேல் இணைந்த DARK FACE Title Launch

JUST IN – YG மகேந்திரன் & KPY ராஜவேல் இணைந்த DARK FACE Title Launch

JUST IN – YG மகேந்திரன் & KPY ராஜவேல் இணைந்த DARK FACE Title Launch

 

பிரபல குணச்சித்திர நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்துள்ள வெப் சீரிஸ் ‘டார்க் ஃபேஸ்’.

இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி கலக்கிய ராஜவேல் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்..

சரண் பிரகாஷ் என்பவர் இசையமைத்து கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.. ஏழு எபிசோடுகளாக இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.. இதை சென்னை பாண்டிச்சேரி இ சி ஆர் சாலையில் ஒட்டுமொத்தமாக வெறும் 12 நாட்களில் படக்குழுவினர் எடுத்து முடித்திருப்பது கூடுதல் தகவல்.. பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்..

குற்றம் செய்யாத ஒரு நிரபராதி தூக்கு தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறார்.. அவன் எப்படி அந்த வழக்கிலிருந்து தப்பித்து தன்னை நிரபராதி என்பதை நிரூபித்தார் என்பதுதான் இந்த வெப்சீரிஸ் திரைக்கதையாகும்..

இதில் மூத்த வக்கீலாக ஒய் ஜி மகேந்திரன் நடிக்க அவரின் உதவி வழக்கறிஞராக ராஜவேல் நடித்திருக்கிறார்.. அப்பாவி இளைஞராக யஸ்வந்த் என்பவர் நடித்திருக்கிறார்.. இதுவரை ஏற்காத நெகட்டிவ் கேரக்டரில் ஒய் ஜி மகேந்திரன் மகள் நடிகை மதுவந்தி நடித்திருக்கிறார்..

 

கதாநாயகிகளாக சௌமியா மற்றும் கீர்த்தனா இருவரும் நடித்துள்ளனர்..

Chosen One என்ற நிறுவனம் சார்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த அபூ கரீம் இஸ்மாயில் என்பவர் தயாரித்திருக்கிறார்.. இவர் லிங்குசாமியை இயக்கிய சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

விரைவில் டார்க் ஃபேஸ் வெப் சீரிஸ் ஒடிடி தளத்திற்கு வர உள்ள நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அபூ கரீம் இஸ்மாயில், ஒய் ஜி மகேந்திரன், ராஜவேல், யஷ்வந்த், இயக்குனர் சரண் பிரகாஷ், மற்றும் சௌமியா, கீர்த்தனா ஆகியோருடன் சிறப்பு விருந்தினர் லிங்குசாமியும் கலந்து கொண்டார்..

கதை நாயகன் ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது…

நான் 1970 – 80களில் இருந்து நடித்து வருகிறேன்.. SP முத்துராமன் இயக்கிய ‘சகலகலா வல்லவன் & முரட்டுக்காளை’ படங்களை போன்று செட்டு தளம் இதில் அமைந்தது.

அவர் படத்தை காட்சி எப்போது எடுத்தார் என்று தெரியாது.. திடீரென படம் முடிந்து விட்டது என்பார்.. அதுபோல கலகலப்பாக சரண் பிரகாஷ் என்பவர் இந்த படத்தை எங்களுக்கு எளிதாக முடித்துக் கொடுத்தார். என் கேரியரில் இந்த படமும் பேசப்படும் படமாக அமையும்.

 

லிங்குசாமியுடன் எனக்கு எப்போதும் நட்பு இருக்கிறது.. அவர் ஒரு முறை அவரது படத்தில் என்னை நடிக்க அழைத்தார்.. அப்போது நான் அமெரிக்கா சென்று இருந்தேன். அதன் பிறகும் அவர் படத்தில் நடிக்க முடியாமலே போய்விட்டது.. விரைவில் நாங்கள் இருவரும் இணைய வாய்ப்பு உண்டு என நம்புகிறேன்” என தெரிவித்தார்..

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது…

“எனக்கு அபூ கரீம் சிங்கப்பூர் சென்ற போது தெரியும்.. அவர் என்னை அப்படி பார்த்துக் கொண்டார்.. எனக்கு எல்லா முகமாக இருந்தார்.. அவர் உயிர் கொடுக்கும் நண்பனாக இருப்பவர்..

அவருக்கு ‘சண்டக்கோழி’ படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தேன்.. இப்போது அவர் தயாரிப்பாளராகி இருக்கிறார்.. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.. என்று படக்குவினரை வாழ்த்தி பேசினார் இயக்குனர் லிங்குசாமி..

 

Dark Face web series Title and First Look launch