One Last Time முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..; தளபதிக்கு வழி விட்ட தமிழ் படங்கள்

One Last Time முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..; தளபதிக்கு வழி விட்ட தமிழ் படங்கள்

One Last Time முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..; தளபதிக்கு வழி விட்ட தமிழ் படங்கள்

 

ஒரு வழியாக பல போராட்டங்களை சந்தித்து ஜூலை 23ம் தேதி திரைக்கு வருகிறது விஜய் நடித்த ‘ஜனநாயகன்’.

இந்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரசியல் சூழ்ச்சி காரணமாக இந்த படத்தில் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது…

ஒருவேளை அப்போது பொங்கல் பண்டிகை சமயத்தில் வெளியாகி இருந்தால் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ என்று டைட்டில் கார்டு இருந்திருக்கும்..

தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ என்ற டைட்டில் கார்டு காத்திருக்கிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்

www.rightnewsraja.com

வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இசை அமைத்துள்ளார்..

சென்சாரில் ஏ சர்டிபிகேட் பெற்றுள்ள ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வாரம் ஜூலை 23ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

எனவே இந்த வாரமும் அடுத்த வாரமும் அதற்கு அடுத்த வாரமும் தளபதி விஜய் நடித்த கடைசி திரைப்படம் என்பதால் பல திரைப்படங்கள் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. தற்போது ஒன்றன்பின் ஒன்றாக பல தயாரிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்..

M

அதன்படி ஜீவி பிரகாஷ் மற்றும் கைடு லோகர் இணைந்து நடித்துள்ள IMMORTAL இம்மாற்றல் திரைப்படம் தளபதிக்கு வழி விடுகிறோம் என்று அறிவித்து செப்டம்பர் 4 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

www.rightnewsraja.com

மேலும் இந்த வாரம் ஜூலை 17ஆம் தேதி வெளியாக இருந்த டார்க் ஹெவன் திரைப்படமும் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்..

ஏற்கனவே அறிவித்தபடி இந்த வாரம் ஜமா புகழ் பாரி நடித்துள்ள ‘அன்பே டயானா’ மற்றும் அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ திரைப்படங்கள் ஜூலை 17ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்து அதன்படி படக்குழுவினர் மும்முரமாக ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

CM Vijay Jana Nayagan release on 23rd July Other movies postponed