BOMB விமர்சனம்… சாதி வெறியர்களுக்கு சாமி தண்டனை

BOMB விமர்சனம்… சாதி வெறியர்களுக்கு சாமி தண்டனை

 

BOMB விமர்சனம்… சாதி வெறியர்களுக்கு சாமி தண்டனை

ஸ்டோரி…

கடவுள் மதம் ஜாதி உள்ளிட்டவைகளால் இரண்டு கிராமங்கள் பிரிந்து கிடக்கிறது.. அடிக்கடி இந்த கிராமங்கள் இடையே மோதல் தொடர்கிறது.. அரசு அதிகாரிகள் முயற்சித்தும் இவர்களுக்குள் சமாதானம் ஏற்படவில்லை..

கம்மாபட்டியை சேர்ந்த காளி வெங்கட்டும், காளபட்டியை சேர்ந்த அர்ஜூன்தாசும் ஊர் கட்டுப்பாடுகளை கலவரங்களை மீறி நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஒரு நாள் திடீரென காளி வெங்கட் இறந்து போகிறார்.. இவரின் தங்கை நாயகி ஷிவாத்மிகா இறந்து விட்டதாக சொன்னாலும் நண்பர் அர்ஜுன் தாஸ் அவர் இறக்கவில்லை அவர் மீது சாமி வந்து இறங்கியதாக சொல்கிறார்.

மேலும் காளி வெங்கட் உடலில் இருந்து Co2 பாம் வெளியேறுகிறது.. அவரது உடலை எவராலும் தூக்க கூட முடியவில்லை.. அர்ஜுன் தாஸ் மட்டுமே அவரைத் தூக்குகிறார்..

அப்படி என்றால் காளி வெங்கட் மீது இறங்கிய சாமியின் அருள் அர்ஜுன் தாசுக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்..

அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் நகைச்சுவை கலந்து சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கின்றனர்..

கேரக்டர்ஸ்…

அர்ஜூன்தாஸ், காளிவெங்கட், ஷிவாத்மிகா, சிங்கம்புலி, நாசர்

இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அர்ஜுன் தாஸ் காமெடியில் கலக்கி இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.. ஆனால் வழக்கம் போல அவர் சீரியஸான ரோலில் அசத்தி இருக்கிறார்.. தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் சீரியஸான சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்..

எந்த கேரக்டர் என்றாலும் 22 கேரக்டாக தன் நடிப்பை கொடுப்பவர் காளி வெங்கட்.. இந்த படத்தின் பலமே அவர்தான்.. இறப்பதற்கு முன்பும் இறந்த பின்பும் அவரது நடிப்பு வேற லெவல் ரகம்..

ஷிவாத்மிகா, சிங்கம்புலி, நாசர் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.. இதில் சிங்கம் புலி சீரியஸ் ரோலில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்..

கலெக்டராக வரும் அபிராமி கேரக்டரில் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம்..

பால சரவணனின் ஒன்லைன் காமெடிகள் படத்திற்கு கூடுதல் பிளஸ்..

டெக்னீசியன்ஸ்…

இசை : இமான்
ஒளிப்பதிவு : பி.எம்.ராஜ்குமார்

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. மெலோடி பாடல்களில் வழக்கமான இதம் சேர்த்து இருக்கிறார் இமான்..

ஜெம்பிரியோ பிக்சர்ஸ்
இயக்கம் : விஷால் வெங்கட்

பிணம் பாம் என்ற லாஜிக்குகளை தவிர்த்து இந்த படத்தை நகைச்சுவை உணர்வுடன் கண்டு ரசிக்கலாம்.. ஜாதிப் பெயரில் அடித்துக் கொள்ளும் ஜாதி வெறியர்களுக்கு கடவுள் மூலம் தீர்வு சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்..

இவர்தான் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

யூட்யூபில் லைவ் செய்திகள் போடுகிறார் பாலசரவணன்.. ஆனால் அந்த கிராமத்தில் நடக்கும் காலகட்டங்களை பார்த்தால் 1990களில் நடப்பது போல உள்ளது.. ரஜினியின் மனிதன் பட போஸ்டர் மற்றும் கிராமத்து மக்கள் & கையில் ஏந்தும் தீப்பந்தம் ஆகியவை பார்த்தால் அந்த காலகட்டத்தை போன்றே தோன்றுகிறது..??

Bomb movie review