FIRST ON NET ‘பேபி & பேபி’ விமர்சனம் 3/5… வாரிசுகளால் வந்த வம்பு

FIRST ON NET ‘பேபி & பேபி’ விமர்சனம் 3/5… வாரிசுகளால் வந்த வம்பு
ஸ்டோரி…
சத்யராஜ் – கீர்த்தனா ஜோடிக்கு மகன் ஜெய்.. இவருக்கு ஜோடி பிரக்யா நக்ரா.. தந்தை எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.. ஆண் வாரிசு பிறந்தால் மட்டுமே குடும்பத்தில் சேர்த்துக் கொள்வேன் என்கிறார் சத்யராஜ்.. ஒரு கட்டத்தில் ஆண் குழந்தையும் பிறக்கவே பேரனை அழைத்துக் கொண்டு வா என்கிறார் சத்யராஜ்.
இந்த தம்பதிகள் ஒரு பக்கம் இருக்க அடுத்தது… இளவரசுவின் மகன் யோகி பாபு.. இவரது ஜோடி சாய் தன்யா.
இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறக்கிறது.. பெண் பிறந்தால் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டாள் என அர்த்தம்.. எனவே என் பேத்தியை அழைத்துக் கொண்டு ஊருக்கு வா என்கிறார் இளவரசு.
ஜெய் மற்றும் யோகி பாபு இருவரும் வேறு வேறு விமானங்களில் பயணித்தாலும் இவர்களின் உறவினர்கள் செய்த தவறினால் குழந்தை மாறிவிடுகிறது.
விமானத்தில் பயணிக்கும் போது தான் தங்கள் குழந்தை மாறிவிட்டது என்பதை அறிகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? குழந்தையை எப்படி கண்டுபிடித்தார்கள்? சத்யராஜ் வாரிசு இளவரசு வாரிசு பிரச்சனை என்ன ஆனது? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு, சாய் தன்யா, இளவரசு, ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோரும் நடித்துள்ளனர்..
சத்யராஜ் – கீர்த்தனா ஜோடி.. ஜெய் – பிரக்யா ஜோடி.. யோகி பாபு – சாய் தண்யா ஜோடி.. கதையின் தேவைக்கேற்ப தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகின்றனர்.. ஜெய் ஹேர் ஸ்டைல் ரசிக்கும்படி இல்லை.. அவரது ஆக்ஷன் காட்சி ஓகே ரகம்.
கிளைமாக்ஸ் காட்சியில் பெண்கள் அனைவரும் சண்டை போடுவதும் சிங்கம் புலியை அடிப்பதும் சிரிப்பு ரகம்.
பல வருடங்களுக்கு முன்பு ராம்கி மற்றும் விவேக் நடிப்பில் ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ என்று ஒரு படம் வெளியானது.. அதே படத்திலும் குழந்தையை மாற்றுவது தான் படத்தின் கதையாகும்.. ஆனால் அதில் இருந்த சிரிப்பலை இதில் மிஸ்ஸிங்..
பத்துக்கும் மேற்பட்ட காமெடி கலைஞர்கள் இருந்தும் காமெடிக்கு படத்தில் பஞ்சம் இருப்பது வருத்தமே.. சில இடங்களில் யோகி பாபு சிரிக்க வைக்கிறார்..
மொட்ட ராஜேந்திரன் & ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் சிரிப்பு மூட்டுகின்றனர்..
மற்றபடி ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் பழைய ஜோக்குகளை சொல்லி மொக்கை போடுகின்றனர்.. அதுவும் ஸ்ரீமன் மயங்கி விழும்போது ‘காஞ்சனா’ ரியாக்ஷனையை பலமுறை கொடுத்து வருகிறார்.. சிங்கம் புலி ஓவர் ஆக்டிங்.. மறைந்த நடிகர் சேஷு ஒரு காட்சியில் வந்தாலும் நம்மை சிரிக்க வைத்து மறக்கடிக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் B.யுவராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் இமான் இசையில் உருவான திரைப்படம் ‘பேபி அண்ட் பேபி’. இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 திரைக்கு வருகிறது..
இமான் இசையில் அழகே அமுதே என்ற தாலாட்டு பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையில் கதை ஓட்டத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் இமான்.. யுக பாரதி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்..
ஆனந்தலிங்கம் எடிட்டிங் செய்ய சாரதி என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..
இயக்குனர் பிரதாப் இயக்கியிருக்கிறார்..
வாரிசு பேரனுக்கு ஆசைப்படும் சத்யராஜ்.. வாரிசு பேத்திக்கு ஆசைப்படும் இளவரசு ஆகியோர் மூலம் குழந்தைகளிடம் கூட பாரபட்சம் காட்டும் சில மனிதப் பிறவிகளை பிரதிபலிக்கிறார்..
ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் ஒன்றுதான்.. ஆண் மட்டும் தான் வாரிசு பெண் குழந்தை மட்டும் தான் வாரிசு என்று இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாக பாவித்து வாரிசாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை ஜெய் & யோகி பாபு கேரக்டர் மூலம் வலியுறுத்தி குடும்ப கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரதாப்..
ஆக இந்த பேபி அண்ட் பேபி.. வாரிசுகளால் வந்த வம்பு
Baby and Baby movie review