Breaking ‘இதயம் முரளி’ : அதர்வா படத்தை தயாரித்து இயக்கும் Dawn ஆகாஷ் பாஸ்கரன்

Breaking ‘இதயம் முரளி’ : அதர்வா படத்தை தயாரித்து இயக்கும் Dawn ஆகாஷ் பாஸ்கரன்

 

 

Breaking ‘இதயம் முரளி’ : அதர்வா படத்தை தயாரித்து இயக்கும் Dawn ஆகாஷ் பாஸ்கரன்

 

தமிழ் சினிமாவில் எவரும் எதிர்பாராத வகையில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது DAWN டான் பிக்சர்ஸ்.

சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் அதிரடியாக தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’.. சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி அதர்வா நடிக்கும் பராசக்தி மற்றும் எஸ்டிஆர் 49 வது படம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 4வது படைப்பாக அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டது.

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார்.. இந்த படத்திற்கு ‘இதயம் முரளி’ என்று தலைப்பிட்டு அறிமுக டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை ஈ சி ஆர் நடைபெற்றது. விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிஹாரிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் அறிமுக டீசரில் அதர்வாவின் காதல், பிரேக்-அப் உள்ளன. மேலும் உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ… ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல… நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது..

இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பேசும்போது.. ஒருதலையாக காதலிக்கும் காதலர்களுக்கு இதயம் முரளி படம் சமர்ப்பணம் என்று நடிகர் அதர்வா அறிவித்தார்..

கதிர் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடிகர் முரளி நடித்து 1990களில் வெளியான படம் ‘இதயம்’.. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.. தற்போது தனது தந்தை நடித்து இதயம் படத்தையும் தந்தை பெயரையும் இணைத்து அதர்வா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Atharvaa launched first look of Idhayam Murali