அசோக் நடித்த ‘வட மஞ்சுவிரட்டு’ பட ஆடியோ & ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்

அசோக் நடித்த ‘வட மஞ்சுவிரட்டு’ பட ஆடியோ & ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்
ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’.
இப்படத்தின் நாயகனாக ‘முருகா’ அஷோக் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’, ‘காங்ஸ் ஆப் மெட்ராஸ்’ , ‘மாயத்திரை’ , ‘ஆர் யூ ஓகே பேபி?’ , ‘பெஸ்டி’, ‘மாயப்புத்தகம்’, ‘லாரா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்..
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சங்கிலி.CPA.
கிராமத்து மண், மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல், பாசம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கலையாகவும் உருவாகி வரும் படம் இந்த ‘வட மஞ்சுவிரட்டு’..
யாழினி நாயகியாக நடித்துள்ளார்..
அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நிர்வாக தயாரிப்பு தினேஷ் பாபு சேகர்.
ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய.. பாடல்களை மணி அமுதவன் எழுத முகேஷ் முனுசாமி இசையமைத்திருக்கிறார்..
இந்த ‘வட மஞ்சுவிரட்டு ‘ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்த போது இதில் நடித்த காளை ஒன்று நடிகர் அசோக்கை திடீரென முட்டியது.. இதனால் அவருக்கு சிறிது காயம் ஏற்பட்டது..

இந்த நிலையில் இன்று 2026 மே மாதம் 25ஆம் தேதி வட மஞ்சுவிரட்டு படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்ட விழா சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ashok starrer Vada Manju Virattu movie audio and Trailer launch

