‘ஹலோ காதல்’.. : மீண்டும் ரொமான்ஸ் ரூட்டில் 2 ஹீரோயின்களுடன் ஆர்யா

‘ஹலோ காதல்’.. : மீண்டும் ரொமான்ஸ் ரூட்டில் 2 ஹீரோயின்களுடன் ஆர்யா

 

‘ஹலோ காதல்’.. : மீண்டும் ரொமான்ஸ் ரூட்டில் 2 ஹீரோயின்களுடன் ஆர்ய

 

 

தமிழ் சினிமாவில் பிளேபாய் என்ற சொன்னால் அது ஆர்யா என்ற பெயர் இருந்து வந்தது.. ஆனால் சமீப காலமாக மற்ற ஹீரோக்களை போல இவரும் ஆக்ஷன் ரூட்டில் பயணித்து வருகிறார்..

இந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய ரூட்டில் அதாவது ரொமான்டிக் ரூட்டில் பயணிக்கிறார் நடிகர் ஆர்யா..

நடிகர் ஆர்யா உடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் இணைந்துள்ளனர்.. மேலும் முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழில் ‘ஹலோ காதல்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஹலோ பிரேமா’ என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்களான ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘நிறைவே’ ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன..

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பிரணய விலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். கதை எழுத, இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பினு நெப்போலியன் படத்தொகுப்புப் பணிகளையும், ஏ.ஆர். மோகன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்..

ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான The Show People மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் (Silver Grain Pictures) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

அடுத்த டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், நாளை டிரெய்லர் வெளியாகும் எனப்பட குழு அறிவித்துள்ளது..

 

Arya and Nikhila Vimal starring Hello Kadhal