Chennai IIT – Techofes 2025 : சிறந்த நடிகர் விருதை வென்ற ‘வணங்கான்’ அருண்விஜய்
Chennai IIT – Techofes 2025 : சிறந்த நடிகர் விருதை வென்ற ‘வணங்கான்’ அருண்விஜய்
இயக்குனர் பாலா & அருண் விஜய் கூட்டணியில் உருவான ‘வணங்கான்’ படம் 2025 பொங்கலுக்கு வெளியானது..
இதில் நடிகர் அருண் விஜய் ஊமையாக (வாய் பேச முடியாதவராக) வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருந்தார்.. இதில் அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர்..
இந்த படத்திற்கு ஜீவி. பிரகாஷ் இசையமைக்க சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்..
இந்த நிலையில், சென்னை ஐஐடி (IIT) Techofes 2025 மெட்ராஸ் வளாகத்தில் ஆண்டுதோறும் தமிழ் திரைத்துறையில் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த வகையில் அங்கு நடந்த விழாவில் நடிகர் அருண் விஜய்க்கு ‘வணங்கான்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது..
Arun Vijay won award at Chennai IIT – Techofes 2025 event


