BREAKING இமான் & ஜிவி பிரகாஷை தொடர்ந்து AR.ரஹ்மான் விவகாரத்து.; மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

BREAKING இமான் & ஜிவி பிரகாஷை தொடர்ந்து AR.ரஹ்மான் விவகாரத்து.; மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

 

 

இமான் & ஜிவி பிரகாஷை தொடர்ந்து AR.ரஹ்மான் விவகாரத்து.; மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக
மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

 

திருமண இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி பிரிவது தற்போது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.. அதுவும் திரையுலகினர் மத்தியில் இது அடிக்கடி நடைபெறுவதாலும் அவர்கள் பிரபலங்கள் என்பதாலும் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் தங்கள் விவகாரத்தை அறிவித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இமான் தன் மனைவியை விவகாரத்து செய்வதாக அறிவித்தித்தார்.. அதன் பின்னர் அவர் வேறு ஒரு திருமணமும் செய்துவிட்டார்.

அது போல் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தன் காதல் மனைவி பாடகி சைந்தவியை விவகாரம் செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களும் தற்போது விவகாரத்து செய்துள்ளார்.

அவரது மனைவி சாய்ரா பானு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர்கள் இல்லற வாழ்வில் 30 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். கதீஜா சமீபத்தில் வெளியான மின்மினி என்ற படத்திற்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

AR Rahman Wife Saira Banu Are Separating After 30 Years

 

 

 

 

Related articles