எப்போ வந்தாலும் ‘மதகஜராஜா’ ஹிட்டடிக்கும் என்பதை நிரூபிச்சிருக்கு.. – அஞ்சலி

எப்போ வந்தாலும் ‘மதகஜராஜா’ ஹிட்டடிக்கும் என்பதை நிரூபிச்சிருக்கு.. – அஞ்சலி

 

 

எப்போ வந்தாலும் ‘மதகஜராஜா’ ஹிட்டடிக்கும் என்பதை நிரூபிச்சிருக்கு.. – அஞ்சலி

 

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‛மதகஜராஜா’ படம் வெளியானது..

2013ல் அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியானாலும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது..

படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சுந்தர் சி, விஷால், அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் நடிகை அஞ்சலி பேசும்போது…

‛‛ஒரு நல்ல படம் 12 ஆண்டுகள் கழித்து வந்தாலும் கூட மக்கள் அதை வரவேற்பார்கள் என்பதை மதகஜராஜா படத்தின் வெற்றி உணர்த்தி இருக்கிறது. பல தியேட்டர்களில் நானும் நேரில் சென்று அதை கண்கூடாக பார்த்தேன். இயக்குநர் சுந்தர்.சி.,யை நான் 12 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன்.

மதகஜராஜா எப்போது வந்தாலும் ஓடும் என நாங்கள் அனைவருமே சொல்லிக் கொண்டிருப்போம். அது நாங்கள் படத்தின் மீது வைத்த நம்பிக்கை.

கலகலப்பு படத்தை மீண்டும் சுந்தர்.சியுடன் இணைந்து பண்ணிய படம் இந்த மதகஜராஜா. கலகலப்பு படத்தைப் போலவே மதகஜராஜா படத்தையும் ஒரு ரசிகையாக நான் என்ஜாய் செய்தேன்..

இரண்டு படங்களிலும் என்னுடைய பெயர் மாதவி தான். அடுத்த படத்திலாவது எனக்கு வேறு பெயர் வையுங்கள் சார்.

டியர் லவ்வரு பாடல் மதகஜராஜா படத்தின் மைய ஈர்ப்பாக அமைந்து விட்டது. அங்காடித்தெரு படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்டுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.. நாங்கள் அடிக்கடி பேசும்போது மதகஜராஜா பற்றி தான் பேசுவோம்..

விஜய் ஆண்டனியின் பாடல்களுக்கு நான் ரசிகை. இந்த படத்தில் டியர் லவ்வரு, சிக்குபுக்கு என இரண்டு பாடல்களுமே என்னுடைய பேவரைட்” என்று பேசினார் அஞ்சலி..

Anjali speech at Madha Gaja Raja success meet

 

—–