ஆர் யூ ரெடி.? ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தளிக்கும் ‘அந்தகன்’ பிரசாந்த்
ஆர் யூ ரெடி.? ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தளிக்கும் ‘அந்தகன்’ பிரசாந்த்
பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி சமுத்திரக்கனி, யோகி பாபு ஆதேஸ்பாலா, நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அந்தகன்’
இப்படம் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியிருந்தது. படத்துக்கு பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிராபகர் வசனம் எழுதியிருப்பார்.
ரூ. 9 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை மட்டுமே பெற்று நல்ல வசூல் வேட்டை ஆடியது..
ஆனாலும் அந்தகன் படத்தை பார்க்காதவர்களுக்காக தற்போது இனிய செய்தி கிடைத்துள்ளது..
இதுநாள் வரை இந்த படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு கிடைத்துள்ளது
‘அந்தகன்’ அமேசான் ப்ரைம் விடியோவில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் தீபாவளி விருந்தாக ஸ்டிரீம் ஆகவுள்ளது..
அத்துடன் படத்தை வெளிநாட்டு ரசிகர்கள் ரசிக்கும் விதமாக ஆஸ்ட்ரோ டிவியில் உள்ள விண்மீண் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. ஒரே நாளில் இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் படம் வெளியிடப்படுகிறது..
Andhagan movie Amazon OTT release update

